முகப்பு /செய்தி /விளையாட்டு / Eid Mubarak- ரஷீத் கான், குர்பாஸுடன் ஈத் முபாரக் கொண்டாடிய மொகமட் ஷமி.

Eid Mubarak- ரஷீத் கான், குர்பாஸுடன் ஈத் முபாரக் கொண்டாடிய மொகமட் ஷமி.

ஈத் முபாரக் பண்டிகையைக் கொண்டாடிய ஷமி

ஈத் முபாரக் பண்டிகையைக் கொண்டாடிய ஷமி

ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் வகிக்கும் ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொகமட் ஷமி ஈத் முபாரக் தினமான இன்று சக வீரர்கள் ரஷீத் கான் மற்றும் இன்னொரு ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுடன் கொண்டாடினார். ட்விட்டரில் அனைவருக்குமான ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் வகிக்கும் ஹர்திக் பாண்டியா தலைமை குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொகமட் ஷமி ஈத் முபாரக் தினமான இன்று சக வீரர்கள் ரஷீத் கான் மற்றும் இன்னொரு ஆப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸுடன் கொண்டாடினார். ட்விட்டரில் அனைவருக்குமான ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

குஜராத் டைட்டன்சின் வைஸ் கேப்டனான ரஷீத் கான் இந்த ஆண்டு பேட்டிங்கில் பயங்கரமாக பினிஷிங் செய்து வருகிறார், தோனி மறந்து போன ஷாட்களை இவர்தான் இப்போது ஆடுகிறார். இந்நிலையில் ரஷித் ஷமியுடன் சேர்ந்து டைட்டன்ஸ் வீரர்களின் ஈத் பண்டிகைக் கொண்டாட்டத்தைக் காட்டும் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

ரஷீத் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறினார்:

மொகமட் ஷமியும் ரஷீத் கான் மற்றும் குர்பாஸுடன் சேர்ந்து ஈத் முபாரக் செய்தியுடன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி சீசனின் முதல் அரைசதம் அடித்த பிறகு ஷமி யார்க்கரில் அவரை வெளியேற்றினார். இந்த சீசனில் டைட்டன்ஸ் அணிக்காக ஷமி 9 போட்டிகளில் 20 என்ற சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ளார்.

First published:

Tags: Gujarat Titans, IPL 2022, Rashid Khan