ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இறுதி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்: மாஸ் காட்டிய மில்லர் - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத்

இறுதி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ்: மாஸ் காட்டிய மில்லர் - ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத்

மில்லர், பாண்டியா

மில்லர், பாண்டியா

ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஐ.பி.எல் 2022 தொடரின் குவாலிபயர் சுற்றின் முதல் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, பட்லர், சாம்சன் இணை ஜோடி சேர்ந்தது. இருவரும் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர்.

  அதிரடியாக ஆடிய சாம்சன் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் சிறப்பாக ஆடிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தனர்.

  அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமிறங்கினர். சஹா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஷப்மன் கில், மேத்யூ வேட் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

  இருவரும் சிறப்பாக ரன்களைக் குவித்த நேரத்தில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷப்மன் கில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய வேட்டும் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, பாண்டியா, டேவிட் மில்லர் இணை ஜோடி சேர்ந்தது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாண்டிய நிதானமாக ஆட, மறுபுறம் டேவிட் மில்லர் அதிரடியைக் காட்டினார்.

  85 ரன்களில் ஜோடி சேர்ந்த இணையை ராஜஸ்தான் வீரர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் இறுதிவரையில் சிறப்பாக ஆடினர். இறுதி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இறுதிஓவரை பிரஷித் கிருஷ்ணா வீசினார். டேவிட் மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். பதட்டமே இல்லாத மில்லர், தொடர்ந்து மூன்று பந்துகளில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

  19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 191 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அடுத்த குவாலிபயரில் வெற்றி பெறும் அணியுடன் மோதி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.

  Published by:Karthick S
  First published:

  Tags: IPL 2022