Home /News /sports /

IPL 2022 CSK vs GT-சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா

IPL 2022 CSK vs GT-சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா

சச்சின்

சச்சின்

சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் குவித்த போது, ​​குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.

மேலும் படிக்கவும் ...
    சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் குவித்த போது, ​​குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.

    சஹா தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் தொடங்கினார் பிறகு பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு ஆடினார்.

    ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு (CSK) எதிராக 134 ரன்கள் இலக்கைத் துரத்தி, சீசனின் 10வது வெற்றியைப்பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.  விருத்திமான் சஹா இந்தப் போட்டிக்கு முன் 140 ஐபிஎல் போட்டிகளில் 2324 ரன்கள் எடுத்திருந்தார்.

    ஐபிஎல் தொடரில் லிட்டில் மாஸ்டர் சச்சின் 2334 ரன்களை எடுத்திருந்தார். நேற்று சஹா 67 நாட் அவுட் என்று ஒரு அருமையான இன்னிங்ஸை ஆடி பினிஷிங் செய்து கொடுத்து வெற்றிபெறச் செய்தார்.  இதனையடுத்து இப்போது 2391 ரன்கள் எடுத்து விருத்திமான் சஹா, சச்சின் டெண்டுல்கரின் ஐபிஎல் ரன்களைக் கடந்தார்.

    சஹா பல்வேறு ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றுள்ளார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியுடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) க்கு மாறினார். 2014 இல், அவர் பஞ்சாப் கிங்ஸில் (PBKS) சேர்ந்தார் மற்றும் 2017 வரை அவர்களுடன் இருந்தார். ஐபிஎல் 2014 இறுதிப் போட்டியில் சஹா ஒரு மறக்கமுடியாத சதம் அடித்தார். 


    2018 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) உடன் இருந்தார் சஹா. SRH உடனான அவர் ஆடியபோதுதான் சஹா ஓப்பனிங்கில் இறங்கி புதிய பந்தை  எதிர்கொள்ளத் தொடங்கினார். 2022 ஆம் ஆண்டில், அவர் குஜராத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்.  ஆனால் அணி நிர்வாகம் அவருக்கு முன்னால் மேத்யூ வேடிற்கு வாய்ப்பு கொடுத்து சஹாவை பெஞ்சில் அமர வைத்தது, ஆனால் அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சஹா 8 இன்னிங்ஸ்களில் 281 ரன்கள் எடுத்துள்ளார்.
    இது தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோரை விடவும் சிறந்த தொடராக சஹாவுக்கு அமைந்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: IPL 2022, Sachin tendulkar, Wriddhiman Saha

    அடுத்த செய்தி