விஜய் மல்லையாவுடன் கிறிஸ் கெய்ல் - படத்தை வெளியிட்டு மல்லையா நெகிழ்ச்சி
விஜய் மல்லையாவுடன் கிறிஸ் கெய்ல் - படத்தை வெளியிட்டு மல்லையா நெகிழ்ச்சி
விஜய் மல்லையா-கிறிஸ் கெய்ல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முன்னாள் உரிமையாளரும், சர்ச்சைக்குரிய தொழிலதிபருமான விஜய் மல்லையா, மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலுடனான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முன்னாள் உரிமையாளரும், சர்ச்சைக்குரிய தொழிலதிபருமான விஜய் மல்லையா, மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் கிறிஸ் கெயிலுடனான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னாள் விண்டீஸ் கேப்டன் கிறிஸ் கெய்ல் 2011 முதல் 2017 வரை ஆர்சிபி அணிக்காக ஆடினார்.
கிறிஸ் கெய்லை தானே ஏலம் எடுத்ததாகவும் ‘அது ஒரு சிறந்த ஏலம்’ என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லையா, “என்னுடைய நல்ல நண்பர், யுனிவர்ஸ் பாஸ், கிறிஸ்டோபர் ஹென்றி கெய்லை மீண்டும் சந்தித்ததில் பெரிய, மகிழ்ச்சி. அவரை ஏலம் எடுத்த நாளிலிருந்து சிறந்ததொரு நட்பு, ஏலத்தில் வாங்குதலிலேயே ஆகச்சிறந்தது கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்ததுதான் என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Great to catch up with my good friend Christopher Henry Gayle @henrygayle , the Universe Boss. Super friendship since I recruited him for RCB. Best acquisition of a player ever. pic.twitter.com/X5Ny9d6n6t
ஐபிஎல்லில் ஆர்சிபியுடன் விளையாடிய போது கெய்ல் சில மறக்கமுடியாத தருணங்களை அனுபவித்தார். 2013 ஐபிஎல் தொடரின் போது, பெங்களூரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 66 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் நம்பமுடியாத 17 சிக்ஸர்களைக் கொண்ட இந்த அபாரமான நாக், இந்திய டி20 லீக்கில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையாக உள்ளது.
இந்தியாவில் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் ஜாமீனில் இருக்கிறார், "ரகசிய" சட்ட செயல்முறையும் முடிந்தது. பிப்ரவரி 2019 இல் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டாலும், மல்லையா பல்வேறு சட்ட வழிமுறைகளைக் கையாண்டு பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் உத்தரவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.