• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரூ.16 கோடிக்கு அந்த வீரரை வாங்கியும் வேஸ்ட் தான் - கவாஸ்கர் ஏமாற்றம்

ரூ.16 கோடிக்கு அந்த வீரரை வாங்கியும் வேஸ்ட் தான் - கவாஸ்கர் ஏமாற்றம்

Gavaskar and Chris Morris

Gavaskar and Chris Morris

ஏலம் எடுக்கப்பட்ட தொகைக்குரிய ஆட்டத்தை கிறிஸ் மோரிஸ் இந்த தொடரில் வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

  • Share this:
16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதற்கான ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தவே இல்லை என்று கிறிஸ் மோரிஸ் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. நடுவே கொரோனா காரணமாக தடைபட்ட இப்போட்டித்தொடர் தற்போது மீண்டும் உத்வேகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் கடைசியாக பிளே ஆஃப் அணிக்கு தகுதி பெறப்போவது யார் என்ற போட்டா போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஏற்பட்டுள்ளதூஉ.

மோசமான தோல்வி:

இதனிடையே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்டது. இருப்பினும் கொல்கத்தா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு இருந்திருக்கும் என்ற நிலையில், கொல்கத்தா அணியுடன் மோதி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது ராஜஸ்தான். கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 171 ரன்களை குவித்த நிலையில் ராஜஸ்தான் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக காட்சியளித்தது. இந்த சீசனிலேயே இது தான் மோசமான ரன் குவிப்பாகும்.

Also Read: IMPS பரிவர்த்தனைக்கான தினசரி வரம்பு ₹ 5 லட்சம் ஆக உயர்வு! RTGS – NEFT என்ன வேறுபாடு?

நல்ல ஃபார்மில் இருக்கும் கொல்கத்தா அணிக்கெதிராக 172 ரன்களை சேசிங் செய்வது என்பது சுலபமான காரியம் இல்லை என்றபோதிலும், ராஜஸ்தான் அணி வீரர்களிடம் உத்வேகமே இல்லை. அந்த அணியின் 3 வீரர்கள் ரன் கணக்கை தொடங்கும் முன்னரே பெவிலியன் திரும்பினர். யாஷ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத் மற்றும் ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி நடையை கட்டினர். இதில் கிறிஸ் மோரிஸ் தான் ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தார்.

ஐபிஎல் ஏல சாதனை:

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் தான். ஐபிஎல் 2021 ஏலத்தின் போது கிறிஸ் மோரிஸ் 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Also Read:  உலகின் முதல் மலேரியா தடுப்பூசியான Mosquirix-க்கு WHO அங்கீகாரம் – ஏன் இத்தனை தாமதம்?

சொதப்பல் ஆட்டம்:

இருப்பினும் ஏலம் எடுக்கப்பட்ட தொகைக்குரிய ஆட்டத்தை கிறிஸ் மோரிஸ் இந்த தொடரில் வெளிப்படுத்தவில்லை என்பதே உண்மை. இந்த சீசனில் அவர் ஆடிய 11 ஆட்டங்களில் மொத்தம் அவர் எடுத்ததே 67 ரன்கள் தான், அதே நேரத்தில் 15 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார்.

கிறிஸ் மோரிஸ் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில், “ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிசை 16.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட போது அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்ப அவரின் ஆட்டம் வெளிப்படவில்லை. அவரின் கிரிக்கெட் கேரியர் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. அவர் மேல் அதீத நம்பிக்கை இருக்கும் ஆனால் அவர் ஏமாற்றி விடுகிறார்.

Also Read:  சமயபுரம் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் பாதயாத்திரை சென்று சாமி தரிசனம்!

கிறிஸ் மோரிஸ் திறமை குறித்து நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவருடைய முழு திறனை வெளிப்படுத்தாமல் அவர் இருந்து வருகிறார். அவரின் திறமைக்கு ஏற்ப அவருடைய மனோதிடம் அமையவில்லை என்பதே இதற்கெல்லாம் காரணம். அவரின் ஆட்டம் எப்போதாவது எடுபடலாம், ஆனால் எப்போதுமே ஒரே சீராக இருக்காது, இதற்கு காரணம் அவருடைய மனோதிடம், திறமைக்கு ஈடாக இல்லை என்பது தான்” இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: