ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 12வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டங்கள் நடைபெறுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 18 செல்போன்கள், லேட்பாப், 7 லட்சம் ரூபாய் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ஆவணங்கள், 41,000 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் லேப்டாப், டிவி, 19 செல்போன்கள், 14 லட்சம் ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனை, 75,000 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய பிரதேச காவல்துறையினர் கூறியுள்ளனர்.
விஜயவர்ஜியா நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் சனிக்கிழமை நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து டிவி, 8 செல்போன்கள், 8,000 ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காவல்துறையினர் நடத்திய ஆய்வில் ஆன்லைன் மூலம் ஐபிஎல் சூதாட்டங்கள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Also read: மிக மோசமான பேட்டிங்: 82 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி படுதோல்வி
இதனிடையே, தமிழகத்தின் கோயம்புத்தூர் பூலுவப்பட்டி பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை ஆலந்துரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 3,200 ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.