எம்.எஸ்.தோனி முதல் முகமது ஆமீர் வரை : 2020-ன் மிகப்பெரிய கிரிக்கெட் ஓய்வுகள்
தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் ஆகஸ்ட் 15-ல் ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகத் தொடங்கி ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இரையாகி 18 டெஸ்ட்கள் 768 ரன்களுடன் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது.

தோனி.
- News18 Tamil
- Last Updated: December 31, 2020, 1:01 PM IST
பெரும்பாலும் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020-ம் ஆண்டு இன்றோடு முடிவுக்கு வருகிறது. கொரோனாவும் 2020-ம் ஆண்டோடு முடிந்து போனால் நல்லது என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது. கிரிக்கெட்டின் பெருந்தலைகள் பல ஓய்வு அறிவித்த ஆண்டாகவும் 2020 அமைந்து விட்டது.
2020 இந்திய கிரிக்கெட் அணி மெல்போர்ன் வெற்றியுடன் முடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ‘தல’ தோனி: ஜார்கண்ட் மாநிலத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து கலக்கு கலக்கென்று கலக்கி உலக அளவில் இந்திய அணியை பெருமை மிக்க அணியாக உயர்த்திய தோனி ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஓய்வு அறிவித்தார். விக்கெட் கீப்பிங்கில் உலகிலேயே சிறந்தவராகத் திகழ்ந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட இருதரப்பு தொடர்களை வென்றவகையில் சிறந்த கேப்டனாகவும் பரிணமித்தார் தோனி. வெற்றி பெற்ற போட்டிகளில் தோனியின் சராசரி 69 என்பது 3வது பெரிய ஒருநாள் சாதனையாகும். டெஸ்ட் போட்டிகளிலும் 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களை எடுத்தார். அதுவும் அவருக்கு பிடித்த சென்னை சேப்பாக்கத்தில் 224 ரன்கள் என்று ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்ததை ரசிகர்கள் மறக்க முடியாது. ஏகப்பட்ட கோப்பைகளுக்குச் சொந்தக்காரர், முதல் ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட், கடைசி ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட். இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும்தான் தோனியை ரசிகர்கள் பார்க்க முடியும்.
சுரேஷ் ரெய்னா:
தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் ஆகஸ்ட் 15-ல் ரெய்னாவும் ஓய்வு அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாகத் தொடங்கி ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு இரையாகி 18 டெஸ்ட்கள் 768 ரன்களுடன் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது. 194 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5,615 ரன்களை 94 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அற்புதமான மிடில் ஆர்டர் வீரர், இவரும் தோனியும் சேர்ந்து அமைத்த அதிரடி கூட்டணிகள் மறக்க முடியாத ஒன்று. 2015 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் 56 பந்துகளில் 74 ரன்கள் விளாசியதும், 2010-ல் மூன்று நாடுகள் தொடரில் இலங்கைக்கு எதிராக 47க்கு 4 என்ற நிலையில் இறங்கி சதம் அடித்ததையும், 2010 டி20 உலகக்கோப்பையில் 60 பந்துகளில் 101 ரன்களை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த இன்னிங்ஸ்களை மறக்க முடியாது.ஷேன் வாட்சன்:
2020 நவம்பரில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஷேன் வாட்சன் ஓய்வு அறிவித்தார். சிஎஸ்கே 2020 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய பிறகு அவர் ஓய்வை அறிவித்தார். இவர் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2008 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. 145 போட்டிகளில் 3,874 ரன்களை 4 சதங்களை அவர் எடுத்துள்ளார். 190 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5,757 ரன்களை விளாசியுள்ளார், சராசரி 41. இதில் 9 சதங்களையும் 168 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2007 மற்றும் 2015 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தார் வாட்சன்.
இயன் பெல்:
இங்கிலாந்தின் ஸ்டைலிஷ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் இயன் பெல். 2015-ல் கடைசியாக ஆடினார். 2020-ல் அனைத்து வடிவ தொழில்பூர்வ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். மிகப்பெரிய டெஸ்ட் வீரரான இவர் 118 டெஸ்ட்களில் 7,727 ரன்களை எடுத்துள்ளார். 22 சதங்கள் எடுத்து பாய்காட், கெவின் பீட்டர்சனுடன் அதிக சத எண்ணிக்கையில் இணைந்தார். 2013 ஆஷஸ் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் 562 ரன்கள் எடுத்து ஸ்டாராகத் திகழ்ந்தார். 2011-ல் இந்தியாவுக்கு எதிரான ஹோம் சீரிஸில் 500 ரன்கள் விளாசினார். இந்தத் தொடரில்தான் தோனி இவர் ரன் அவுட் ஆன போது அது தவறு என்று மீண்டும் ஆடச்சொன்னதும் குறிப்பிடத்தக்கது.
கோரி ஆண்டர்சன்:
2014 புத்தாண்டு தினத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 36 பந்துகளி சதம் எடுத்து உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இடது கை நியூஸிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன். 3 வடிவங்களிலும் 93 ஆட்டங்களில் இவர் நியூஸி.க்கு ஆடியுள்ளார். டிசம்பரில் ஓய்வு அறிவித்தார்.
முகமது ஆமீர்:
பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய ஆனால் சிறப்பான திறமைகள் கொண்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார் ஆமிர். 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2010-ல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக 5/52 என்று அசத்தினார். பாகிஸ்தான் அந்த டெஸ்ட்டை வென்றது. 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் அபாரமாக வீசி இந்திய டாப் ஆர்டரைக் காலி செய்ததால் இந்தியா இறுதிப் போட்டியை இழந்தது. ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி இங்கிலாந்தில் சிறைத்தண்டனை அனுபவித்தார், சமீபமாக ஓய்வு அறிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் முன்னாள் வீரர்களையும் திட்டு திட்டென்று திட்டினார்.
வெர்னன் பிலாண்டர்:
தென் ஆப்பிரிக்காவின் கிளென் மெக்ரா என்று அழைக்கப்பட்ட துல்லிய ஸ்விங் பவுலர் பிலாண்டர். 64 டெஸ்ட் போட்டிகளில் 224 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 13 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இருமுறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 22.32. மிகப்பிரமாதமான பவுலர், விராட் கோலியை சொல்லி சொல்லி எடுத்தார்.
இதே 2020-ல் பார்த்திவ் படேல், பிராக்யன் ஓஜா ஆகியோரும் ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2020 இந்திய கிரிக்கெட் அணி மெல்போர்ன் வெற்றியுடன் முடித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ‘தல’ தோனி: