• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • IPL 2021,PBKS vs RR: பஞ்சாப்-ராஜஸ்தான் போட்டியில் 5 மேட்ச் வின்னர்கள் யார் யார்?

IPL 2021,PBKS vs RR: பஞ்சாப்-ராஜஸ்தான் போட்டியில் 5 மேட்ச் வின்னர்கள் யார் யார்?

கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன்

கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன்

இன்றைய ஐபிஎல் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமை பஞ்சாப் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதுகின்றன, இரு அணிகளிலும் சேர்த்து 5 மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

 • Share this:
  கே.எல்.ராகுல்: நல்ல தொடக்கம் கொடுப்பதோடு கே.எல்.ராகுல் இறுதி வரை நின்று ஆடினால் நிச்சயம் அந்தப் போட்டிகளை பஞ்சாப்கிங்ஸ் அணி வென்றிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இந்தியாவில் நடந்த ஐபிஎல் சுற்றில் லோகேஷ் ராகுல் 7 மேட்ச்களில் 331 ரன்கள் எடுத்து செம பார்மில் இருக்கிறார். சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியைல் அதிக ரன்களுடன் 2ம் இடத்தில் இருக்கிறார் ராகுல். கடந்த முறை யுஏஇயில் நடந்த ஐபிஎல் தொடரில் 670 ரன்களைக் குவித்து அதிக ரன்கள் குவித்ததற்கான மகுடமான ஆரஞ்சு தொப்பியை ராகுல்தான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்று பஞ்சாப்-ராஜஸ்தான் மோதல்


  சஞ்சு சாம்சன்: இவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமானவர் 221 ரன்கள் பஞ்சாப் இலக்கை தனது 64 பந்து 119 அதிரடி சதத்தினால் ஒன்றுமில்லாமல் அடிக்கச் செய்தார், ஆனால் 4 ரன்களில் தோல்வி அடைந்தது ராஜஸ்தான். இவர் இதுவரை ஐபிஎல் 2021-ல் 7 போட்டிகளில் 277 ரன்கள் எடுத்துள்ளார். உலகக்கோப்பை டி20யில் தன்னைத்தேர்வு செய்யாத கடுப்பில் வேறு இருக்கிறார், பஞ்சாப் பவுலர்களுக்குத்தான் இது பிரச்சனை. ஐபிஎல் 2020-ல் 375 ரன்கள் எடுத்துள்ளார். சேவாக் போல எந்த ஒரு பந்தையும் சிக்சருக்கு அனுப்பும் திறன் கொண்ட இவர் பல நேரங்களில் எதிர்பார்ப்பை முறியடித்து ஏமாற்றிவிடுவது வழக்கம்.

  மாயங்க் அகர்வால்: பெரிய டி20 பிளேயர் என்று கூற முடியாவிட்டாலும் ஐபிஎல் 2020 மூலம் தன்னை இந்த வடிவத்திலும் சோபிக்கக் கூடிய வீரர் என்பதை நிறுவினார். ஐபிஎல் 2021-ல் இதுவரை 260 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் அச்சுறுத்தல்தான். ராகுல் இல்லாவிட்டால் மாயங்க் தான் கேப்டன் என்ற அளவுக்கு இவரது பேட்டிங் திறமை மதிப்ப்பிடப்பட்டுள்ளது, மாட்டியது என்றால் அன்று பின்னி எடுத்து விடக்கூடிய பிளேயர் மாயங்க் அகர்வால். இவர் தனிநபராக போட்டிகளை வெல்லக்கூடியவர். ஐபிஎல் 2020 தொடரில் 11 போட்டிகளில் 424 ரன்கள் எடுத்தார் மாயங்க் அகர்வால்.

  இஷாந்த் சர்மா, மனைவி பிரதிமா சிங், மயங்க் அகர்வால் மற்றும் அவரது மனைவி.


  கிறிஸ் மோரிஸ்: ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், ஆல்ரவுண்டராக தன் மதிப்பை இன்னும் சரிவர நிறுவவில்லை. பவுலிங்கில் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார், டெத் ஓவர்களை நன்றாக வீசுவார், பேட்டிங்கில் உருப்படியாகப் பயன்படுத்தினால் அதிரடி காட்டுவார். இவரது தினத்தில் இவர் ஒரு மேட்ச் வின்னர்தான்.

  ராகுல் திவேத்தியா


  ராகுல் திவேத்தியா: ஐபிஎல் 2020-ல் கலக்கினார், இதனால் இவரை இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வு செய்தனர், ஆனால் வாய்ப்பு கொடுக்காமலே ஒழிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர், இந்தியாவில் நடந்த சுற்றில் சரியாக ஆடவில்லை. ஆனால் யுஏஇ-யில் கடந்த ஐபிஎல் தொடரில் 255 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மிகச்சிறந்த பினிஷர். ஷெல்டன் காட்ரெல் இன்னமும் கூட அந்த 5 சிக்ஸ் ஓவரை மறந்திருக்க மாட்டார்.

  ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: