பாகிஸ்தான் வேண்டாம், ஐபிஎல் தான் வேண்டும்: முடிவெடுத்த 4 வீரர்கள் யார் தெரியுமா?

கோப்புக் காட்சி

நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடவிருக்கிறது, ஆனால் இந்தத் தொடரில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமிசன், லாக்கி பெர்கூசன் ஆகியோர் விளையாடப் போவதில்லை.

  • Share this:
    நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடவிருக்கிறது, ஆனால் இந்தத் தொடரில் கேன் வில்லியம்சன், ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமிசன், லாக்கி பெர்கூசன் ஆகியோர் விளையாடப் போவதில்லை.

    இந்த 4 வீரர்களும் ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள போட்டிகளுக்காக தங்கள் அணியுடன் இணைந்து விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் தொடர் செப்டம்பரில் நடைபெறுகிறது, இதே காலக்கட்டத்தில்தான் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகளும் நடைபெறுகிறது.

    Also Read: டி20 உலகக்கோப்பை: வலுவான நியூசிலாந்து அணி அறிவிப்பு- ராஸ் டெய்லர் அதிர்ச்சி நீக்கம்

    உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரும் எமிரேட்சில் நடைபெறுவதால் ஐபிஎல் 2021 நடைபெறும்போது எமிரேட்ஸ் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகளை கணித்து தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் முக்கிய வீரர்கள் கைல் ஜேமிசன், ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்கூசன் ஆகியோர் சர்வதேச பாகிஸ்தான் தொடரை புறக்கணித்து ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    Also Read: ஹர்பஜன் சிங் நீங்க இப்படி சொல்லியிருக்க கூடாது - கவுதம் கம்பீர் அட்வைஸ்

    உண்மையில் உலகக்கோப்பை டி20 காரணமா அல்லது பைசா போய் விடுமா என்ற அச்சமா என்பது தெரியவில்லை.

    எல்லாவற்றை விடவும் வேடிக்கை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமே, “நாங்கள் ஐபிஎல் குறித்து நடைமுறை ரீதியான அணுகுமுறையை மேற்கொள்கிறோம்” என்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதே போல் பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு பச்சை கொடி காட்டுமா, நிச்சயமாகக் காட்டாது என்பதுதான் உண்மை.

    ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்னொரு நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தனியார் முதலாளித்துவ கிரிக்கெட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்குவதை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இத்தனைப் பச்சையாகச் செய்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐபிஎல் கிரிக்கெட் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது 27 நாட்களில் 31 போட்டிகள் நடைபெறுகின்றன.
    Published by:Muthukumar
    First published: