வீடு மேல் வீடாக வாங்கித் தள்ளும் எம்.எஸ்.தோனி

தோனி

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புனேயில் புதிய வீடு வாங்கியுள்ளார்.

 • Share this:
  இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி புனேயில் புதிய வீடு வாங்கியுள்ளார்.

  தோனியும் அவரது குடும்பத்தினரும் ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். மும்பையில் ஏற்கெனவே புதிய வீடு ஒன்றை வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் புனேயில் உள்ள பிம்ப்ரி-சிங்க்வாதில் புதிய வீட்டை வாங்கியுள்ளார் தோனி. முன்னதாக மும்பையில் புதிதாகக் கட்டப்படும் தங்களது வீட்டின் படத்தை சாக்‌ஷி தோனி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

  இப்போது புனே மீது காதல் கொண்ட தோனி ராவெத்தில் உள்ள எஸ்டாடோ பிரசிடென்ஷியல் சொசைட்டி என்ற செல்வந்த பகுதியில் புதிய வீட்டை வாங்கியுள்ளார்.

  இந்தியன் பிரீமியர் லீக் 2021 போட்டிகள் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டதையடுத்து தோனி தற்போது தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 5-ல் வென்று டெல்லி கேப்பிடல்ஸுக்குக் கீழ் 2ம் இடத்தில் உள்ளது.

  காய்கறி உட்பட பல தொழில்களை நடத்தும் தோனி எம்.எஸ்.டி. எண்டெர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாக்‌ஷி இருக்கிறார். கடந்த ஆண்டு ஒரு ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்.

  இதோடு குதிரைகள் தோனிக்கு பிடித்த பொழுது போக்கு எனவே குதிரை வளர்க்கிறார். மேலும் பண்ணை வீட்டில் ஏகப்பட்ட செல்ல நாய்க்குட்டிகளையும் வளர்க்கிறார்கள்.

  கிரிக்கெட் மூலம் வெறும் ரூ.30 லட்சம் சம்பாதித்தாலே போதும் என்று ஒரு காலத்தில் எம்.எஸ்.தோனி கூறியதாக வாசிம் ஜாஃபர் போட்டு உடைத்தார். ஆனால் இப்போது வீடு மேல் வீடாக வாங்கிக் கொண்டே செல்கிறார், புதிது புதிதாக தொழில்களைத் தொடங்குகிறார்.

  2021-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் தோனி. இப்போதைக்கு சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் அதற்குத் தாண்டியும் செயல்பட்டு வருகிறார். பேட்டிங் சுத்தமாக அவுட் ஆகி விட்டது, மேலேறி வந்து சிக்ஸ் அடிக்குமாறு பேட்டை ஓங்கி விட்டு லொட்டு வைக்கிறார். ஹெலிகாப்டர் ஷாட்டெல்லாம் அவருக்கு மறந்து விட்டது என்று தல ரசிகர்கள் புலம்பும் வேளையில் சிக்சர்கள் போல் வீடுகளை வாங்கிக் கொண்டிருக்கிறார் தோனி.
  Published by:Muthukumar
  First published: