முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

டீன் ஜோன்ஸ்

டீன் ஜோன்ஸ்

IPL 2020 | ஐ.பி.எல் 2020 தொடரின் வர்ணணையாளராக டீன் ஜோன்ஸ் இருக்கிறார். இந்நிலையில், மும்பையில் அவர் மாரடைப்பால் காலமானார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பு காரணமாக மும்பையில் இன்று காலமானார். ஐ.பி.எல் 2020 தொடரில் வர்ணணையாளராக டீன் ஜோன்ஸ் இருந்து வந்ததார். இன்று காலை ஜோன்ஸ் சக வர்ணணையாளர்கள் பிரட் லீ மற்றும் நிகில் சோப்ராவுடன் காலை உணவு சாப்பிட்டுள்ளார்.

வர்ணையின் போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பால் மரணமடைந்த டீன் ஜோன்ஸ்க்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 46.55 சராசரி உடன் 3631 ரன்கள் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு டிராவில் முடிந்த டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள தகவலில்,

டீன் ஜோன்ஸ் உயிரிழந்த செய்தியை நாங்கள் மிகுந்த சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் திடீரென இருதய நோயால் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய உயர் தூதரக அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என கூறி உள்ளது.

ஐபிஎல் போட்டி முடிவுகள்

First published:

Tags: IPL 2020