பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்ட கனே வில்லியம்சன்.. கொதித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள்...

பெஞ்ச்சில் அமரவைக்கப்பட்ட கனே வில்லியம்சன்.. கொதித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள்...

கனே வில்லியம்சன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.

  • Share this:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 3வது ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் சைரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருந்த போதிலும் மிடில் ஆர்டரில் வந்த ஜானி பேர்ஸ்டோ மற்றும் மனிஷ் பாண்டே ஆகிய இருவரும் அரை சதம் அடித்து ஹைதராபாத் அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தனர்.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி நிர்வாகம் சில வினோதமான முடிவுகளை எடுத்தது. இதில் ரசிகர்களை மிகவும் கொந்தளிக்க வைத்தது எதுவென்றால் அது கனே வில்லியம்சனை பெஞ்சில் அமரவைத்த முடிவு தான். நியூசிலாந்து அணியின் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனான அவரை எதற்காக அமர வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொதிப்படைந்தனர். ஒரு அணியின் ஆடும் லெவனில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தலாம் என்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, ரஷீத் கான் மற்றும் முகமது நபியை பயன்படுத்தியது. நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கனே வில்லியம்சன் போன்ற ஒரு வீரரை பெஞ்சில் அமர வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் தோல்வியடைய தகுதி பெற்றவர்கள் தான்’

“அவரை போன்ற ஒரு வீரரை பெஞ்சில் அமர்ந்துள்ளதை பார்க்கும் போது மனது வலிக்கிறது. எப்படிப்பட்ட கேப்டன், எப்படிப்பட்ட வீரர். ஒவ்வொரு ஆண்டும் இது போன்று எதாவது நடந்துகொண்டிருக்கிறது. அவரை வேறு அணிக்காக விளையாடவாவது அனுமதியுங்கள். எல்லாத்துக்கும் மேல் அவர் ஒரு தேசிய அணியின் கேப்டன்”

இப்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக அணி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே கனே வில்லியம்சனை ஏன் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்பது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் விளக்கமளித்துள்ளார். “கனே வில்லியம்சனுக்கு மேட்ச் பிட்னெஸ் கிடைக்க மேலும் அவகாசம் தேவை. அவர் விரைவில் ஆடும் லெவனிற்குள் வருவார்” என தெரிவித்தார்.
Published by:Arun
First published: