முகப்பு /செய்தி /விளையாட்டு / எங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே: ‘யார்க்கர்’ நடராஜன் நெஞ்சைத் தொடும் பதிவு

எங்களை உன் பெற்றோராகத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி மகளே: ‘யார்க்கர்’ நடராஜன் நெஞ்சைத் தொடும் பதிவு

நடராஜன், மனைவி, குழந்தை.

நடராஜன், மனைவி, குழந்தை.

புகைப்படத்துடன் தன் செல்ல மகளுக்கு இனிய வாழ்த்துச் செய்தியையும் நடராஜன் பகிர்ந்துள்ளார் அதில், “எங்கள் இளம் தேவதை ஹன்விகா. நீதான் எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இந்திய அணியில் டி.நடராஜன் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் அவர் அசத்திய அசத்தலில் பேரும்புகழும் வானளாவ உயர்ந்தது.

ஒரே தொடரைல் வலை பவுலராகச் சென்று 3 வடிவங்களிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். டி20 தொடரை வென்ற போது தொடர் நாயகன் ஹர்திக் பாண்டியா யார்க்கர் நடராஜனுடன் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சிச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றித் தொடருக்குப் பிறகு இந்தியா திரும்பிய போது சொந்த ஊரில் டி.நடராஜனுக்கு செண்டை, மேளம் முழங்க சரவெடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரின் போதே குழந்தை பிறந்தது நடராஜனுக்கு, ஆனால் தொடர்ந்து அப்படியே ஆஸ்திரேலியா சென்று 2 மாதகால பயணம் முடிந்துதான் ஊர் திரும்பி தன் செல்ல மகளை அவரால் பார்க்க முடிந்தது.

ஆனார்ல் விராட் கோலிக்கு விருப்ப ஓய்வு அளித்தார்கள். இதனை சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டு பிசிசிஐ-யின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கண்டித்ததும் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது.

இந்நிலையில்தான் தன் 4 மாத மகள் மற்றும் மனைவியுடன் புகைப்படப் பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடராஜன். மகளுக்கு ஹன்விகா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

புகைப்படத்துடன் தன் செல்ல மகளுக்கு இனிய வாழ்த்துச் செய்தியையும் நடராஜன் பகிர்ந்துள்ளார் அதில், “எங்கள் இளம் தேவதை ஹன்விகா. நீதான் எங்கள் வாழ்க்கையின் மிக அழகான பரிசு.

எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்குக் காரணமே நீதான். எங்களை பெற்றோராக நீ தேர்ந்தெடுத்ததற்கு நன்றி லட்டு. உன்னை எப்போதும் நேசிப்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, மார்ச் 12ம் தேதி மீண்டும் நடராஜனின் யார்க்கர்களைப் பார்க்கலாம்.

சமீபத்தில் பழனி சென்று மொட்டை போட்ட நடராஜன் கேரளாவுக்கு மனைவி, மகளுடன் சென்று விட்டு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricketer natarajan, India Vs England, T natarajan