சாஹல், குல்தீப் யாதவ்வின் வீழ்ச்சி என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது: எல்.சிவராம கிருஷ்ணன்

யஜுவேந்திர சாஹல்.

வந்த புதிதில் சாஹல், குல்தீப் யாதவ் என்ன வீசுகின்றனர் என்பது பேட்ஸ்மென்களுக்குப் புரியாமல் இருந்தது, ஆனால் இப்போது புரிந்து கொண்டு விட்டனர், இதனால் சாத்து வாங்குகின்றனர் என்று முன்னாள் இந்திய, தமிழக அணி வீரர் எல்.சிவராம கிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஆப்பு வைத்ததில் சாஹல், குல்தீப் ஆகியோருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால் இருவரும் ஆரம்ப காலத்தில் பந்தை காற்றில் மிக மெதுவாக வீசினர், அதாவது இவர்களது பந்துகள் 65-70 கிமீ வேகம்தான் வரும், இதனால் பேட்ஸ்மென்களுக்கு சிரமம் அதிகமாக இருந்தது, இவர்களும் விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு குறிப்பிட்ட வெற்றிகளைப் பெற்றுத் தந்தனர்.

  ஆனால் அதன் பிறகு பந்துக்காக வெய்ட் பண்ணி ஆடிய பேட்ஸ்மென்கள் இவர்கள் பந்து வீச்சை பவுண்டரிக்கு பறக்க விட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் சாஹல் சோபிக்கவில்லை. 3 ஒருநாள் போட்டிகளிலும் இல்லை. டி20 அணியிலேயே குல்தீப் யாதவ் இல்லை, இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டைக் கூட குல்தீப் வீழ்த்தவில்லை.

  ஐபிஎல் 2021-ல் ஆர்சிபி அணிக்கு ஆடும் சாஹல் 8 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினர். குல்தீப் யாதவ் ஐபிஎல் 2021-ல் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

  இந்நிலையில் குல்தீப் யாதவ், சாஹல் வீழ்ச்சி குறித்து முன்னாள் லெக் ஸ்பின்னர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் கூறியதாவது:

  குல்தீப், சாஹல் பவுலிங் வீழ்ச்சியை விட என்னை வேதனைப்படுத்தும் விஷயம் வேறொன்றும் இல்லை. இருவரும் தங்களது ஆரம்ப கட்டத்தில் பிரமாதமாக வீசினர். பேட்ஸ்மென்களுக்கு இவர்கள் என்ன வீசுகிறார்கள் என்பது புரியவில்லை, ஆனால் அதன் பிறகு இவரை அடித்து ஆடும் வழிமுறைகளை பேட்ஸ்மென்கள் கண்டுப்பிடித்து விட்டனர், இவர்கள் வீசுவதை முழுதும் கண்டுகொண்டனர்.

  இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கொண்டு ஒவ்வொரு பவுலரும் என்ன செய்கிறார்கள் என்பது ஆய்வு செய்யப்படுகிரது. ஸ்பின்னர்களை பொதுவாக அதிகம் ஆய்வு செய்கின்றனர். ஏனெனில் அயல்நாட்டு வீர்ர்கள் ஸ்பின்னுக்குத்தான் திணறுகின்றனர்.

  முரளிதரன், வார்ன், அனில் கும்ப்ளே போல் வெற்றியடைய வேண்டும் எனில் பல விதமான பந்துகளையும் வீச வேண்டும்.

  குல்தீப் யாதவ் வீசும் லைன் மற்றும் லெந்த் சீராக இல்லை. சாஹலிடம் வேறு தினுசான பந்து வீச்சு முறைகள் இல்லை. என்ன வீசப்போகிறார் என்பது தெரிந்து விடுகிறது. ராகுல் சாஹர், குல்தீப்பை விடவும் நன்றாக வீசுகிறார்.

  இவ்வாறு கூறினார் எல்.சிவராம கிருஷ்ணன்.
  Published by:Muthukumar
  First published: