ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இன்னமும் கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனிதான் சிறந்த கேப்டன் - ஹர்பஜன் சிங்

இன்னமும் கூட ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனிதான் சிறந்த கேப்டன் - ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் - தோனி

ஹர்பஜன் - தோனி

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனியின் கேப்டன்சி இடத்தை இட்டு நிரப்புவது கடினம்.

  • Cricketnext
  • 1 minute read
  • Last Updated :

நடப்பு ஐபிஎல் தொடரில் கன்னாப்பின்னாவென்று தோற்று ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பி ஏறக்குறைய இழந்தே விட்டது சிஎஸ்கே அணி, ஜடேஜாவை கேப்டனாக்கினார்கள் பிறகு அவர் வேண்டாம் என்று சொன்னார் என்று மீண்டும் தோனியை கேப்டனாக்கினார்கள். தோனி கேப்டனானதும் ஒரு போட்டியில் வென்றது, ஆனால் அன்று ஆர்சிபி ஆப்பு வைத்தது.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஆடிய ஹர்பஜன் சிங் கூறியதாவது:

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை எம்.எஸ்.தோனியின்  கேப்டன்சி இடத்தை இட்டு நிரப்புவது கடினம். தோனி என்ன செய்தாரோ அதை மற்றவர்களிடமிருந்து கேப்டன்சியில் எதிர்பார்க்க முடியாது, தோனி போல் மற்றவர்களால் அந்த அணியை வழிநடத்த முடியாது.

அவரை கேப்டன்சியிலிருந்து மாற்றுவது என்பது ஒரு கடினமான முடிவே. ஐபிஎல்-ல் அவர்தான் சிறந்த கேப்டன். ரவீந்திர ஜடேஜாவை முயன்றனர், ஆனால் பயனில்லை, எனவே மீண்டும் தோனியிடமே கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது. இது நல்ல விஷயம்தான். தோனிக்கு அப்பால் சிஎஸ்கே எப்படி ஆடப்போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது.

தோனியின் கேப்டன்சியைப் பற்றி பேசினால் அவர் டி20 உலகக்கோப்பை, 50 ஒவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபிக்களை வென்றுள்ளார். ஐபிஎல்-ன் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். இந்த கேப்டன்சியையும் சிஎஸ்கேவையும் ரொம்ப காலமாக அவர் வழிநடத்தி வருகிறார், இதற்கான பெருமை அவரையே சாரும்.

அவர் டக் அவுட்டில் எப்போதும் வீரர்களுடன் இருப்பார். ஆனால் டக் அவுட்டில் இருப்பதும் களத்தில் தோனி இருப்பதும் வேறு விஷயங்கள். களத்தில் இருப்பதுதான் அணிக்குப் பலம்.

என்கிறார் ஹர்பஜன் சிங்.

First published:

Tags: CSK, Harbhajan Singh, IPL 2022, MS Dhoni