டிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும் - பாகிஸ்தான் சம்பவத்தை நியாபகப்படுத்திய சேவாக்

தோனி, ராகுல் டிராவிட்

  • Share this:
    இந்திராநகர் ரெளடிடா... என ராகுல் டிராவிட் காரில் நின்றுகொண்டு சத்தம் போடும் வீடியோ க்ளிப் இணையத்தில் வட்டமடித்தது. அது டிராவிட் நடித்த கிரெடிட் கார்டு தொடர்பான விளம்பர படம் என்பது பின்னர் தெரியவந்தது. காரில் இருந்து சாலையில் செல்வோர்களை திட்டுவது, கிரிக்கெட்  வைத்து கார் கண்ணாடிகளை உடைப்பது காரில் நின்றுக்கொண்டு இந்திராநகர் ரெளடிடா.. என சத்தம் போடுவது என டெரராக நடித்திருப்பார் டிராவிட்.

    இந்த விளம்பரத்தை டிராவிட் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டர்களும் ரசித்தனர். டிராவிட் மிகவும் பொறுமைசாலி அவர் தனது பொறுமையை அவ்வளவு சீக்கிரத்தில் இழக்கமாட்டார். அவரது குணத்துக்கு நேரெதிராக இந்த விளம்பரத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ‘டிராவிட்டின் இந்த முகத்தை நான் பார்த்ததில்லை’ என இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கமெண்ட் செய்திருந்தார்.

    இந்நிலையில் டிராவிட் கோபமாக இருந்ததை நான் பார்த்துள்ளேன். அதுவும் தோனி மீது கோபப்பட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். சேவாக் கூறுகையில், “ நான் டிராவிட் கோபத்தை பார்த்துள்ளேன். இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிக்கொண்டிருந்தது. தோனி அப்போதுதான் இந்திய அணிக்குள் வந்திருந்தார். தோனி போட்டியின் போது தூக்கியாட நினைத்து பாயிண்ட் திசையில் கேட்சாகி அவுட்டானார். தோனியிடம் டிராவிட் மிகவும் கோப்பட்டார். ‘ நீ இப்படித்தான் ஆடுவியா? நீ ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தார். நான் அப்படியே அந்த இடத்தை விட்டு பின்வாங்கினேன்.

    புயல் போன்று ஆங்கில வார்த்தைகளை டிராவிட் உதிர்த்துக்கொண்டிருந்தார். எனக்கு அதில் பாதி வார்த்தைகள் புரியவில்லை. அடுத்த போட்டிகளில் தோனி பெரிய அளவில் நிறைய ஷாட்டுகளை அடிக்கவே இல்லை. நான் தோனியிடம் சென்று உனக்கு என்னாச்சு என்று விசாரித்தேன். மறுபடியும் டிராவிட்டிடம் திட்டு வாங்க நான் விரும்பவில்லை. ஆட்டத்தை அமைதியாக முடித்துவிட்டு திரும்புவதையே விரும்புகிறேன்” என்றார்.
    Published by:Ramprasath H
    First published: