• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘தோனியை இனி களத்தில் பார்க்க முடியும் என்று நம்பிக்கையில்லை’- தக்க வைக்கப்படும் 3 வீரர்கள்

‘தோனியை இனி களத்தில் பார்க்க முடியும் என்று நம்பிக்கையில்லை’- தக்க வைக்கப்படும் 3 வீரர்கள்

தோனி

தோனி

ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியை அணியில் தக்கவைக்குமா என்று ரசிகர்கள் ஏங்கியிருக்க தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஷான் போலாக், ‘ஊஹூம், தோனியை சிஎஸ்கே தக்க வைக்க வாய்ப்பில்லை’ இனி தோனியை களத்தில் காண்பதரிது என்றும் அவர் கூறுகிறார்.

  • Share this:
    ஐபிஎல் 2022 தொடரில் சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியை அணியில் தக்கவைக்குமா என்று ரசிகர்கள் ஏங்கியிருக்க தென் ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஷான் போலாக், ‘ஊஹூம், தோனியை சிஎஸ்கே தக்க வைக்க வாய்ப்பில்லை’ இனி தோனியை களத்தில் காண்பதரிது என்றும் அவர் கூறுகிறார்.

    கொல்கத்தாவை வீழ்த்தி அன்று ஐபிஎல் பைனலில் கோப்பையை வென்றது தல தோனியின் சிஎஸ்கே படை. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமான தருணம், சிஎஸ்கே 4வது முறையாகக் கோப்பையை வென்றது. ஆனால் பில்லியன் டாலர் கேள்வி என்னவெனில் சிஎஸ்கே அணி நிர்வாகம் அடுத்த ஐபிஎல்க்கு தோனியை தக்க வைக்குமா என்பதே.

    தோனியும் இது குறித்து குழப்பமாக முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார், ஒரு புறம் மஞ்சள் சீருடையில் என்னைப் பார்க்கலாம், சென்னையில் கடைசி போட்டி என்கிறார் இன்னொரு புறம் பிசிசிஐ கையில் உள்ளது என்கிறார், காரணம் ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்க வைக்கலாம் என்பதான் வரம்பை பிசிசிஐ 2 ஆகவும் வைக்கலாம், 4ஆகவும் வைக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஆல்ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர் ஷான் போலாக் சென்னை அணி தக்க வைக்க கூடிய 3 வீரர்கள் பெயரை தெரிவித்துள்ளார். அதாவது ஸ்டார் பிளேயர், வளரும் பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட், டுபிளெசிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சிஎஸ்கே தக்க வைக்க வாய்ப்புள்ளது, தோனி அணியின் ஆலோசகர், தலைமைப் பயிற்சியாளர் என்று எந்த ஒரு நிலையிலும் தக்கவைக்க வாய்ப்புள்ளது என்கிறார் ஷான்போலாக்.

    அதாவது களத்தில் இனி தோனியை காண்பதரிது என்கிறார் ஷான் போலாக். தோனியின் குழப்பமான, புதிரான பேச்சுகளை வைத்துப் பார்க்கும் போது ஷான் போலாக் சொல்வது உண்மை போலத்தான் தெரிகிறது.

    எந்த மாற்றமானாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான மையமான வீரர்களை தேர்வு செய்யவேண்டும் எந்த விதத்திலும் சென்னை அணி உரிமையாளரோ, அணியோ பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தோனி தெளிவாக இருக்கிறார், எனவே தான் அணியில் வீரராக நீடித்தால் அது அணிக்கு சரியாக இருக்காது என்று தோனி நினைக்கிறாரோ என்னவோ ஷான் போலாக் அப்படித்தான் நினைக்கிறார்ப் போல் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: