IPL 2022 Dhoni - ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது - தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
IPL 2022 Dhoni - ஜடேஜாவுக்கு மாற்று வீரர் கிடையாது - தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி
தோனி , ஜடேஜா
விலா எலும்பு காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியிலிருந்து நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது, இல்லை, சர்ச்சை காரணமாகவே விலகியாதாக சில நம்பத்தகுந்த ஊடகச் செய்திகள் கூற, ‘ஜடேஜாவை ரொம்பவே சிஎஸ்கே ‘மிஸ்’ செய்கிறது என்று தோனி கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்ததோடு தோனிதான் இதற்குத்தான் காரணம் என்ற குற்றச்சாட்டிலிருந்தும் அவரை விடுவிப்பதாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுமே யார் தோற்பது என்பதில் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடினர்.
நேற்றைய தோல்வி மூலம் நடப்பு சீசனில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணியுடன் சென்னை அணியும் தற்போது இணைந்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட ஜடேஜா பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் தோனி மீண்டும் கேப்டன் ஆனார்.அதை தொடர்ந்து அவர் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகினார்.
இந்த நிலையில் மும்பை அணியுடனான நேற்றைய போட்டியில் டாஸ் நிகழ்வின் போது ஜடேஜா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தோனி பதில் அளித்தார்.
ஜடேஜா விளையாடாதது அணிக்கு இழப்பு என கூறிய தோனி, "அவர் அணியில் இருந்தால் எங்களால் பலவித அணிச்சேர்க்கைகளையும் முயற்சி செய்து பார்க்க முடியும். எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக்கூடியவர். சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது மிகக் கடினம். அவரைப் போல் யாரும் பீல்டிங் செய்ய முடியாது. அந்த விதத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தோனி தெரிவித்தார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.