வர்ணனையாளராகிறார் தினேஷ் கார்த்திக்- ஸ்கை ஸ்போர்ட்ஸின் நட்சத்திரங்களுடன் இணைகிறார்

நிதாஹஸ் கோப்பையுடன் தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் 2021 தொடரில் கொல்கத்தாவுக்கு ஆடிவரும் தினேஷ் கார்த்திக் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றமாக இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரெட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றவிருக்கிறார்.

 • Share this:
  இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஸ்கை ஸ்போர்ட்ஸ் நட்சத்திர வர்ணனையாளர்களுடன் தினேஷ் கார்த்திக்கும் இணைகிறார்.

  இங்கிலாந்தின் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு சார்பில் வரும் ஜூலை 21 முதல் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் அணிக்கு மொத்தம் 100 பந்துகள் வீசப்படும். இதில் மொத்தம் 68 போட்டிகள் நடைபெறுகின்றன.

  இந்தத் தொடர் வெற்றி பெற்றால் அது ஐபிஎல் தொடரின் செல்வாக்கையும் வீழ்த்தும் என்று பேசப்பட்டு வருகிறது.

  இதற்கான பெண்கள் தொடரில் இந்திய வீராங்கனைகள் ஷபாலி, ஹர்மன்பிரீத், ஸ்மிருதி மந்தனா உட்பட 5 வீராங்கனைகள் இதில் களம் காண்கின்றனர்.

  இதற்கான வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டேரன் சமி உள்ளிட்ட நட்சத்திர வர்ணனையாளர்களுடன் தினேஷ் கார்த்திக் இணைகிறார்.

  பாகிஸ்தான் கிரேட் வாசிம் அக்ரம், இலங்கை முன்னாள் நட்சத்திரம் சங்கக்காரா, ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரம் மெல் ஜோன்ஸ், இவர்களுடன் ஸ்கை வர்ணனையில் உள்ள ரெகுலர் வர்ணனையாளர்களான நாசர் ஹுசைன், எபனி ரெய்ன்போர்டு, ராப் கீ, டேவிட் லாய்ட், மைக்கேல் ஆர்த்தர்டன் ஆகியோரும் உள்ளனர்.

  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டும் பாதியிலேயே தூக்கப்பட்டு இயான் மோர்கன் தற்போது கேப்டனாக உள்ளார், ஆனால் இயான் மோர்கனுக்கு டி20 கேப்டன்சி அவ்வளவாக வரவில்லை, அவரது பேட்டிங்கும் சொதப்பி வருகிறது.

  சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான தங்களது தொடக்க ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பிங்கில் இன்றும் இடது கை ஒரு கை கேட்ச்கள் முதல் டைவிங் கேட்ச்கள், ஸ்டம்பிங்குகள் என்று அசத்தி வருகிறார் தினேஷ் கார்த்திக்.
  Published by:Muthukumar
  First published: