• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • அஸ்வின் விவகாரத்தில் பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் - சேவாக் கடும் சாடல்

அஸ்வின் விவகாரத்தில் பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் - சேவாக் கடும் சாடல்

சேவாக்

சேவாக்

ரிஷப் பந்த் உடலில் பட்டு சென்ற பந்துக்கு ஒரு ரன்னை அஸ்வின் அழைத்து இருவரும் ஓடிய விவகாரம் பூதாகாரம் அடைந்த விவகாரத்தில் பெரிய குற்றவாளி யார் என்றால் தினேஷ் கார்த்திக்தான் என்று விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார். 

  • Share this:
    கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தில் இந்த விவகாரம் பூதாகாரமாக அஸ்வினை பிடித்து எல்லாரும் சாட, அஸ்வினுக்கு ஆதரவாக சேவாக், கம்பீர் போன்றோர் கருத்துகளை வெளியிட அஸ்வின் தன் பங்குக்கு தன் செயலில் தவறில்லை, மோர்கன் தாங்கள்தான் தார்மீகத்தில் உயர்ந்தவர்கள் என்று பிறரை தரக்குறைவாக பேச உரிமையில்லை என்றும் தன் சமூகவலைத்தளப்பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்தார்.

    இந்த விவகாரம் எழுந்ததே, பூதாகாரமாக ஆனதே தினேஷ் கார்த்திக் செய்த வம்பு வேலைதான் என்று சேவாக் கூறியுள்ளார்: “இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி என்று நான் கருதுகிறேன். மோர்கன் இது பற்றி என்ன கூறினார் என்பதை தினேஷ் கார்த்திக் ரொம்ப முக்கியம் என்று கருதி வெளிப்படுத்தினார் பாருங்கள் அதில்தான் இது பூதாகாரமாகியுள்ளது.

    அது ஒன்றுமில்லை ஒரு வாக்குவாதம் அவ்வளவுதான் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தால் அது அதோடு முடிந்திருக்கும். பிறகு எதற்கு இவர் அதைக்கூறினார், இவர் அதைக்கூறினார் என்றெல்லாம் வரப்போகிறது” என்று விரேந்திர சேவாக் மிகச்சரியாகக் கூறியுள்ளார், மைதானத்தில் நடப்பது அங்கேயோடு முடியவேண்டும், மீடியாக்காரர்களுக்கு தீனி போடுவது விளையாடும் வீரர்களின் வேலை அல்ல என்பதுதான் சேவாக் கருத்தின் சூட்சமம் ஆகும்.

    இதையும் படிங்க: அஸ்வின் நடத்தையில் கோபமடைந்த தோனி கடுமையாக திட்டினார்- சேவாக் மனம் திறப்பு
     தினேஷ் கார்த்திக் அன்று போட்டி முடிந்தவுடன் விலாவாரியாக, ராகுல் திரிபாதி த்ரோ ரிஷப் பந்த் மேல் பட்டு ஓவர் த்ரோவானது, அஸ்வின் தான் ரிஷப் பந்தை அழைத்தார் இருவரும் ஓடினர், இது மோர்கனுக்குப் பிடிக்கவில்லை, இது பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை என்றாலும் சமாதானம் செய்துவைத்ததில் மகிழ்ச்சி என்று நைசாகப்போட்டுக் கொடுத்து விட்டார்.

     

    Also Read: அது ஓவர் த்ரோதான் ஏன் ஓடக்கூடாது?- அஸ்வின் தன்னிலை விளக்கம்
     இதனால்தான் பூதாகாரமானது, தினேஷ் கார்த்திக் கூறியிருக்காவிட்டல் அதோடு முடிந்திருக்கும் என்று சேவாக் கூறுவதில் விஷயம் இருக்கவே செய்கிறது.


    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: