Home /News /sports /

24 வயசுலேயே நன்றாக ஆடுவேன் என்று நான் உத்தரவாதம் அளித்ததில்லை, 40 வயதில் எப்படி?- பேட்டிங் சொதப்பல் பற்றி தோனியின் நியாயம்

24 வயசுலேயே நன்றாக ஆடுவேன் என்று நான் உத்தரவாதம் அளித்ததில்லை, 40 வயதில் எப்படி?- பேட்டிங் சொதப்பல் பற்றி தோனியின் நியாயம்

தோனி

தோனி

திங்களன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். 17 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்தார். வெறும் காத்துதாங்க வருது ரக பேட்ஸ்மெனாகி விட்டார் தோனி.

திங்களன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனி மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். 17 பந்துகளில் 18 ரன்களை மட்டுமே எடுத்தார். வெறும் காத்துதாங்க வருது ரக பேட்ஸ்மெனாகி விட்டார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் போலவோ, அணிக்குப் பங்களிப்பு செய்யும் ஒரு டைனமிக் வீரர் போலவோ தோனி ஆடவில்லை, அணியின் ஓனர் போல் செயல்படுவதாகவே தெரிகிறது.

வடிவேலு தலைநகரம் பட காமெடியில் சொல்வாரே, ‘அருவாள், கத்தி, கம்பு எல்லாம் என்னை டச் டச் பண்ணி டயர்டாப் போய் கிடக்கு’ அப்படீன்னு சொல்வாரே, அது போல தோனியை கடுமையாக விமர்சனம் செய்தாகி விட்டது, இனி அவரை விமர்சிக்க வார்த்தைகளுக்குத்தான் பஞ்சம் என்றாகிவிட்டது. டாடிஸ் ஆர்மி, ரிட்டையர்டு பீப்புள் டீம் என்பதோடு தோனியின் பேட்டிங் குறித்து கடும் விமர்சனங்கள் பலதரப்புகளிலிருந்தும் வந்தும் தோனியின் ஆட்டம் மாறுவதாக தெரியவில்லை. ஏனெனில் அவரால் முடியாது. அருவாள், கம்பு, கத்தி போல் வார்த்தைகளும் அவரை விமர்சித்து டயர்டாகிப் போய்விட்டன.

இந்நிலையில் தன் பேட்டிங் குறித்து அவர் நேற்று கூறியதாவது:

நாங்கள் இன்னும் அதிகப்படியாக ஸ்கோர் செய்திருக்க வேண்டும். நான் எதிர்கொண்ட முதல் 6 பந்துகள் வேறொரு போட்டியாக இருந்தால் தோல்வியைக் கூட ஏற்படுத்தியிருக்கும்.

நான் விளையாடும்போது என்னைப் பார்த்து யாரும் இவர் ஃபிட் இல்லை என்று கூறி விடக் கூடாது. ஆட்டத்திறன் என்பது உத்தரவாதம் அளிக்கக் கூடியதல்ல. நான் 24 வயதில் ஆடிய போதே என் ஆட்டத்திறன் பற்றிய உத்தரவாதங்களை நான் அளித்ததில்லை அப்படி இருக்கும் போது 40 வயதில் நான் எப்படி உத்தரவாதம் அளிக்க முடியும்?

என்னை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி, தோனி அன்ஃபிட், உடற்தகுதி இலலாதவர் என்று யாரும் கூறிவிடக்கூடாது. அது தான் எனக்கு மிகவும் பாசிட்டிவ் ஆன ஒரு விஷயம். இளம் வீரர்களுடன் சரிசமமாக ஓட முடிகிறது. அவர்கள் வேகமாக ஓடுகின்றனர், அவர்களுக்கு சவால் அளிப்பது நல்லதுதானே.

இவ்வாறு கூறினார் தோனி.

24 வயதிலேயே இப்படி ஆடுவேன், நன்றாக ஆடுவேன் என்று உத்தரவாதம் அளித்ததில்லை என்ற மனநிலையில் இருந்த வீரரை எப்படி இந்திய அணியின் கேப்டனாக்கினார்கள்? அப்போதைய அணித்தேர்வுக்குழு பதிலளிக்குமா? பல்லக்குத் தூக்கிகள் இருக்கும் வரை இவரது புகழுக்கு எந்த வித பங்கமும் ஏற்பட்டு விடாது!

2020 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் வெறும் 200 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பினார் தோனி. மேலும் சென்னையின் குழிப்பிட்சில் ஸ்பின்னை வைத்து பெரும்பாலான போட்டிகளில் வென்று ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று வந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த ஆண்டு யுஏஇ.யில் இந்த சாதக அம்சம் இல்லாததால் சிஎஸ்கே அணி பல்லிளித்ததைப் பார்த்தோம். தோனி உண்மையில் பெரிய கேப்டன் என்றால் அங்கு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறச் செய்ய வேண்டியதுதானே என்ற விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:

Tags: CSK, Dhoni, Dhoni batting, IPL 2021, MS Dhoni

அடுத்த செய்தி