தோனி விக்கெட்டுக்காக 3 வருஷம் காத்திருந்தேன்..! - மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆவேஷ் கான்

வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட சென்னை அணிக்கு எதிராக பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசினார் ஆவேஷ் கான்.

வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட சென்னை அணிக்கு எதிராக பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசினார் ஆவேஷ் கான்.

 • Share this:
  தோனி என்னுடைய கனவு விக்கெட் அவரை அவுட்டாக்கியதில் மகிழ்ச்சி என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் கூறியுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை க்ளீன் போல்டாகி வெளியேற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடருக்காக தோனி கடுமையாக பிராக்டிஸ் செய்து வந்தார். இந்நிலையில் அவர் 2 பந்துகளை சந்தித்து க்ளின் போல்டாகி வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

  இந்தாண்டு நடந்த சையத் முஸ்டக் அலி டி20 டிராபி தொடரில் மத்தியப்பிரதேச அணிக்காக விளையாடி ஆவேஷ் கான் 5 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சமீபத்திய ஃபார்ம் டெல்லி அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. வலுவான பேட்டிங் ஆர்டர் கொண்ட சென்னை அணிக்கு எதிராக பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசினார் ஆவேஷ் கான். சென்னை அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய நம்பிக்கை அளித்தார்.

  பவர் ப்ளேயில் டுப்பிளிஸிஸ் விக்கெட்டை விக்கெட் வீழ்த்தி சென்னை அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதுகுறித்து பேசிய ஆவேஷ் கான், “ மூன்று வருடங்களுக்கு முன்பு மகி பாய் ( தோனி) கேட்ச் டிராப்பானது. மகி பாய் விக்கெட் என்னுடைய கனவு விக்கெட். மூன்று வருடங்களுக்கு பிறகு என்னுடைய கனவை நனவாக்கியுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தோனி சமீபத்தில் கிரிக்கெட் ஆடவில்லை. அவர் போட்டிகளில் ஆடவில்லை. எனவே அவரை பிரஷர் செய்ய வேண்டும் என நினைத்தோம். இந்த பிரஷர் காரணமாக விக்கெட் எடுத்தேன்.” என்றார்.

  2018-ம் ஆண்டு ஆவேஷ் கான் தனது கனவு விக்கெட்டான தோனியின் விக்கெட்டை கைப்பற்றும் முயற்சி நழுவியது. கோலின் முன்ரோ அந்த கேட்சை டிராப் செய்தார். 3 வருடங்களுக்கு பிறகு ஆவேஷ் கான் கனவு விக்கெட் கிடைத்துள்ளது.
  Published by:Ramprasath H
  First published: