• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • MS Dhoni : ராணுவ மாஸ்க் அணிந்து கெத்தாக என்ட்ரி கொடுத்த தல தோனி..!

MS Dhoni : ராணுவ மாஸ்க் அணிந்து கெத்தாக என்ட்ரி கொடுத்த தல தோனி..!

தோனி

தோனி

IPL 2020 | Chennai Super Kings | MS Dhoni

  • Share this:
சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மாஸ்க் அணிந்து நேற்று சென்னைக்கு வந்தார். தோனி ராணுவத்தில் கௌரவ லெப்டினானகாக உள்ளார்.

நடப்பாண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.  இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று தனி விமானத்தில் சென்னை வந்தனர்.

சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, மோனு குமார், தீபக் சஹார் உள்ளிட்ட 6 வீரர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலம்  அடையார் கிரவுண் பிளாசா ஹோட்டல் அழைத்துவரப்பட்டனர். மீதமுள்ள சி.எஸ்.கே  இந்திய வீரர்கள் மிக விரைவில் சென்னை வரவழைக்கப்படவுள்ளனர்.

சி.எஸ்.கே அணியில் உள்ள 16 இந்திய வீரர்களில் 15 பேர் சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர். கொரோனோ காலம் என்பதால் தமிழக அரசிடமிருந்து சிறப்பு  அனுமதி பெறப்பட்டு  கட்டுப்பாடுகளுடன் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

அடையாரில் உள்ள கிரவுண் பிளாசா நட்சத்திர விடுதியில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு வெளி நபர்கள், ஊழியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தங்கும் அறையில் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் தங்கும் அறை, மைதானத்தை தவிர்த்து வேறு எங்கும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், மைதான பராமரிப்பாளர்களை  தவிர்த்து வேறு யாரும் மைதானத்திற்கு  உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

சி.எஸ்.கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 22 ம் தேதி பயிற்சி முடித்து சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட உள்ளனர். இதற்கு முன் மீண்டும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வரும் வீரர்கள் துபாய் புறப்படவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: