ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Dhoni | சென்னையின் பிரபல மருத்துவமனைக் குழும விளம்பர தூதரானார் தோனி

Dhoni | சென்னையின் பிரபல மருத்துவமனைக் குழும விளம்பர தூதரானார் தோனி

தோனி.

தோனி.

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டின் பிரபல காவேரி மருத்துவமனை குழுமத்தின் பிராண்ட் அம்பாசடராக, அதாவது விளம்பரத் தூதராக முன்னாள் இந்திய கேப்டனும் நடப்பு சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதாவது காவேரி மருத்துவமனையின் வளர்ச்சியும் தோனியின் வளர்ச்சியும் ஒன்று போன்றதே என்கிறது காவேரி நிர்வாகம்.

“காவேரி மருத்துவமனையைப் போல் தோனியும் சிறிய டவுனிலிருந்து வந்து பெரிய உச்சத்தைத் தொட்டவர், திருச்சியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக ஆரம்பித்தோம். இப்போது 1,500 படுக்கைகள் கொண்ட, தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் கிளைகள் கொண்ட மருத்துவமனை குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளோம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இயலக்கூடிய கட்டணங்களுடன் தரமான மருத்துவமே எங்கள் குறிக்கோள்” என்று காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

தோனியும் 20 ஆண்டுகளுக்கும் மேல் மருத்துவச் சேவை புரிந்து வரும் ஒரு நிறுவனத்துடன் விளம்பர தூதராக கூட்டிணைவதில் பெருமையடைகிறேன் என்றார்.

தோனி அடுத்ததாக ஐபிஎல் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறார். ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகள் யுஏஇ-யில் நடைபெறுகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் அட்டவணையில் முதலிடம் பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 2ம் இடத்தில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

எமிரேட்சில் நடைபெற்ற முந்தைய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி செம சொதப்பு சொதப்பி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Dhoni, IPL 2021, MS Dhoni