சிஎஸ்கே நெட் பவுலர் சல்மான் கான் எம்எஸ் தோனியுடன் நடத்திய சுருக்கமான உரையாடலில், டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் அடிக்கடி ஆஃப் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கவே பார்ப்பார்கள் என்பதால் கொஞ்சம் யோசிச்சு போடு என்று தோனி, சல்மான் கானிடம் தெரிவித்துள்ளார்.
பல வீரர்களை எடுத்து ஒழித்திருப்பதுதான் சிஎஸ்கேவின் வரலாறு, முதல் ஐபிஎல் தொடரில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் பழனி அமர்நாத் இப்போது எங்கே என்று கூட தெரியவில்லை, பாபா அபராஜித்தை தன்னுடனேயே அழைத்துச் சென்ற தோனி மருந்துக்குக் கூட ஒரு வாய்ப்பைக் கூட அளிக்கவில்லை, தமிழர்களை அணியில் எடுப்பதில்லை எடுத்தாலும் வாய்ப்பு வழங்குவதில்லை என்ற ரீதியில்தான் சென்னை இருக்கிறது.
இந்நிலையில் பாவம் கிரவுண்ட்ஸ்மேன் என்ற பரிதாபத்துக்குரியவர்கள் வர்க்கத்தில் தோன்றிய சல்மான் கான் என்ற சிஎஸ்கே நெட் பவுலரின் தந்தையும் ஒரு கிரவுண்ட்ஸ்மேன் தான்.
சிஎஸ்கேவிடமிருந்து நெட் பவுலராக தனக்கு அழைப்பு வந்த கதையைச் சல்மான் கான் கூறும்போது, “ஒரு நாள், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரியிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, இந்த சீசனில் நான் நெட் பவுலராக சேரலாமா என்று கேட்டேன். பின்னர், எனது பெயரை (மும்பை வீரர்) துஷார் தேஷ்பாண்டே சிபாரிசு செய்தார் என்பதை அறிந்தேன். நான் உற்சாகமாக இருந்தேன், ஏனெனில் எனக்கு கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும், இல்லையெனில் நான் கிளப் கிரிக்கெட்டோடு முடிந்து விடுவேன்.” என்றார் சல்மான் கான்.
MS தோனியுடன் அவர் மேற்கொண்ட சுருக்கமான உரையாடலில், சிந்தித்து பந்து வீச வேண்டும் என்று தோனி கூறியுள்ளார், ஏனெனில் ஆட்டத்தின் குறுகிய வடிவத்தில் பேட்டர்கள் அடிக்கடி ஆஃப்-ஸ்பின்னர்களைப் பின்னி எடுத்துவிடுவார்கள் என்று கூறியுள்ளார் தோனி.
“நான் மஹி பாய் மற்றும் ஜடேஜாவிடம் பேசினேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன், இந்த இரண்டு மாதங்கள் என் வாழ்க்கையை மாற்றக்கூடும். எனது பந்துவீச்சு பற்றி மஹி பாயிடம் கேட்டேன்.
டி20களில், எல்லோரும் ஆஃப் ஸ்பின்னரை அடிக்க முயற்சிப்பார்கள், எனவே உங்கள் பந்துவீச்சைப் பற்றி கொஞ்சம் யோசித்து வீசுங்கள் என்றார் தோனி. சில ஆட்டங்களுக்குப் பிறகு என்னிடம் பேசுவேன் என்றார். உரிமையாளர் எங்கள் எல்லோரையும் சமமாகவே நடத்துகின்றனர். சூழல் மிக நன்றாக உள்ளது” என்றார் சல்மான் கான்,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.