தோனி என் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருப்பேன் என்றார் : நினைத்துப் பார்த்து வியக்கும் சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்தது, இதற்கான ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது, இந்தத் தகவலை தன்னிடம் முதன் முதலில் தெரிவித்தது தோனிதான் என்று இப்போது நினைவுகூர்ந்து வியக்கிறார் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா.

 • Share this:
  ஐபிஎல் தொடர்களில் 2010, 2011 பிறகு 2018 என்று மூன்று முறை தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனி கோப்பையை வென்றது, இதிலெல்லாம் ரெய்னாவின் பங்களிப்பு அபரிமிதமானது. இன்னும் சொல்லப்போனால் தோனியை விடவுமே வெற்றிக்கு வித்திட்ட பல இன்னிங்ஸ்களை ரெய்னா ஆடிக்கொடுத்துள்ளார்.

  இந்நிலையில் யுஏஇயில் நடந்த கடந்த ஐபிஎல் தொடருக்கு முன் சர்ச்சையில் சுரேஷ் ரெய்னா கோபப்பட்டு நாடு திரும்பினார். தோனி போலவே தனக்கும் பால்கனி உள்ள அறை வேண்டும் என்று ரெய்னா கேட்டதாகவும் அது கொடுக்கப்படவில்லை என்பதால் அவமானப்பட்டு திரும்பியதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.  என்ன நடந்தது என்பது பற்றி தோனி இன்றளவில் மவுனம் காத்து வருகிறார். ரெய்னா இந்தியா திரும்பிவிட்டார் என்ற போதும் போனால் போகட்டும் என்ற நிலைப்பாட்டில்தான் தோனி இருந்ததாக ஆங்கில ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

  ஆனால் இப்போது இருவரும் ராசியாகி விட்டனர், 2021 ஐபிஎல் தொடரில் மீண்டும் சேர்ந்து ஆடினர். ரெய்னா 7 போட்டிகளில் 123 ரன்களை மட்டுமே எடுத்து சற்றே சொதப்பினார்.

  இந்நிலையில் ரெய்னா தான் எழுதும் ‘பிலீவ்’ என்ற தன் வரலாற்று நூலில் கூறியிருப்பதாவது:

  ஐபிஎல் முதல் ஏலம் நடந்த போது எல்லா வீரர்களைப் போலவும் எந்த அணி நம்மை தேர்வு செய்யப்போகிறதோ என்று டென்ஷனுடன் காத்திருந்தேன். கடைசியில் சென்னை அணி என்னை ஏலம் எடுத்தது.  இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது, ஏனெனில் தோனியுடன் ஆடப்போகிறோம் என்ற காரணத்தினால்தான். ஆனால் நான் சென்னை அணிக்கு ஆடப்போகிறேன் என்ற தகவலை எனக்கு முதலில் கூறியது யார் தெரியுமா? தோனிதான். மேலும் என் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக தோனி கூறியதை என்னால் மறக்க முடியாது.

  முதல் ஏலத்தில் ஹெய்டன், முரளிதரன், பிளெமிங் என பல முன்னணி வீரர்களை சென்னை அணி ஏலம் எடுத்தது. பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஆடியதை மறக்க முடியாது, எனக்கும் தோனிக்குமான நட்பை நெருக்கப்படுத்தியதும் இந்த ஐபிஎல் தொடர்தான்.

  இவ்வாறு தன் சுயசரிதையில் கூறினார் சுரேஷ் ரெய்னா.

  ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நின்று போனது. ஆனாலும் சுனில் கவாஸ்கரின் அவதானிப்பின் படி
  Published by:Muthukumar
  First published: