முகப்பு /செய்தி /விளையாட்டு / தோனி மைதானத்தை தாண்டி அடித்த சிக்ஸ்... பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய லக்கி மேன் - வீடியோ

தோனி மைதானத்தை தாண்டி அடித்த சிக்ஸ்... பந்தை எடுத்துக் கொண்டு ஓடிய லக்கி மேன் - வீடியோ

தோனி அடித்த சிக்ஸ்

தோனி அடித்த சிக்ஸ்

CSK | MS Dhoni | தோனி சிக்ஸர் அடித்த பந்தை எடுத்துக் கொண்டவர் லக்கி மேன் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் தோனி ஹட்ரிக் சிக்ஸ் விளாசினார்.

ஐ.பி.எல் 13-வது சீசனின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 7-வது வீரராக களமிறங்கினார்.

இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் ஹட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டது, சி.எஸ்.கே அணியின் தோல்வியை மறைத்துவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஹட்ரிக் சிக்ஸரில் ஒரு பந்தை தோனி மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார்.

மைதானத்தையும் தாண்டி சாலையில் விழுந்த பந்தை அங்கிருந்த ஒருவர் எடுத்துக் கொண்டு ஓடினார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி சிக்ஸர் அடித்த பந்தை எடுத்துக் கொண்டவர் லக்கி மேன் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தோனி கடைசி ஓவரில் ஹட்ரிக் சிக்சர் அடித்தது குறித்து ரசிகர்கள் பலர் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

PURPLE CAP:

நேற்றையப் போட்டியில் சி.எஸ்.கே - ராஜஸ்தான் இரண்டு அணியினரும் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். 33 சிக்ஸர்களில்,சஞ்சு சாம்சன் - 9, பேஃப் டு பிளெசிஸ் - 7, எம்.எஸ். தோனி - 3, சாம் குர்ரான் -2 மற்றும் தலா நான்கு சிக்சர்களை ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர், மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் அடித்து பட்டையை கிளப்பினர்.

First published:

Tags: CSK, IPL 2020, MS Dhoni