IPL DHONI IS NUMBER ONE WITH REGARD TO MOST RUNS BY AN INDIAN IN ODIS AGAINST ENGLAND MUT
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் தோனிதான் - யுவராஜ் 2ம் இடம், சச்சின் 3வது இடம்
தோனி
இங்கிலாந்து அணியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் ரன்களைக் குவித்தவர்களில் இயன் பெல் 1,163 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். கெவின் பீட்டர்சன் 1138 ரன்கள் எடுத்து 2ம் இடத்தில் இருக்கிறார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேயில் முதல் ஒருநாள் பகலிரவு போட்டி இன்று மதியம் தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தது ‘தல’ தோனிதான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவெனில் இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 இடங்களில் உள்ள வீரர்கள் இந்திய வீரர்களே.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்:
1. மகேந்திர சிங் தோனி - 1546 ரன்கள்
2. யுவராஜ் சிங் - 1523 ரன்கள்
3. சச்சின் டெண்டுல்கர் 1455 ரன்கள்
4.சுரேஷ் ரெய்னா 1207
5. ராகுல் திராவிட் 1012 ரன்கள்
6. சேவாக் - 1008 ரன்கள்.
இங்கிலாந்து அணியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ஒருநாள் ரன்களைக் குவித்தவர்களில் இயன் பெல் 1,163 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். கெவின் பீட்டர்சன் 1138 ரன்கள் எடுத்து 2ம் இடத்தில் இருக்கிறார்.
பவுலிங்கில் யார் யார்?
இந்தியாவுக்கு எதிராக ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகளுடன் ஒருநாள் போட்டிகளில் முன்னிலை வகிக்கிறார். ரவீந்திர ஜடேஜா 37 விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்கிறார். ஹர்பஜன் 36 விக்கெட்டுகள், அஸ்வின் 35, ஸ்ரீநாத் 35. பிளிண்டாப் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
விராட் கோலி இப்போது வரை இங்கிலாந்துக்கு எதிராக 1178 ரன்கள் எடுத்திருக்கிறார், இவர்கள் அனைவரையும் அவர் இந்தத் தொடரில் இல்லாவிட்டாலும் கரியரில் ஓவர்டேக் செய்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதே போல் டாஸ் தோற்று போட்டியை வென்ற வகையிலும் எம்.எஸ்.தோனி 18 முறை சாதித்துள்ளார். ஸ்டீவ் வாஹுடன் இதில் சமன் செய்கிறார். ஆனால் இதில் 23 முறை டாஸ் தோற்று போட்டியை வென்ற வகையில் கிரேம் ஸ்மித், ரிக்கி பாண்டிங் முன்னிலை வகிக்கின்றனர்.