பழைய தோனி இல்ல.. 7-வது இறங்கி ஒன்னும் பண்ண முடியாது... - கம்பீர் ஓப்பன் டாக்

தோனி

தோனி முன்பே வந்து ஆடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என சுனில் கவாஸ்கரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் .

 • Share this:
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சின்னதல ரெய்னாவின் கம்பேக் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேவேளையில் தல தோனியின் பழைய பேட்டிங்கை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். டெல்லி கேப்பிடஸ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் தோனி 2 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆவேஷ் கான் வீசிய பந்தை தோனி அடித்து ஆட முயன்று இன்ஸைட் எட்ஜாகி ஸ்டெம்புகளை பதம்பார்த்தது. தோனி தற்போது 7-வது டவுனில் விளையாடி வருகிறார். ஆனால் அவர் இன்னமும் முன்னால் வந்து அணியை வழிநடத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ‘ தோனி சீக்கிரமாக வந்து பேட்டிங் செய்ய வேண்டும். நீங்கள்தான் முன்னால் இருந்து வழிநடத்தி செல்ல வேண்டும். ஒரு தலைவன்தான் அணியை முன்னால் இருந்து வழிநடத்தி செல்ல வேண்டும். நீங்கள் 7-வது வீரராக களமிறங்கினால் உங்களால் அதனை செய்யமுடியாது. ஒரு கேப்டன் தான் முன்னால் இறங்கி நம்பிக்கை தரவேண்டும். சி.எஸ்.கேவின் பவுலிங் லைன் அப்பில் கொஞ்சம் குறைபாடுகள் உள்ளது. ஆனால் 4 வருடங்களுக்கு முன்னால் பார்த்த பழைய தோனி இல்லையே. 4 அல்லது 5-வது டவுனில் களமிறங்கிய தோனி ஆடி அணியை வழிநடத்த வேண்டும். “ எனக் கூறியுள்ளார்.

  'தோனி அணியை வழிநடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். இளம்படைகளை கொண்ட அணியை அவர் வைத்திருக்கிறார். அதில் சிலர் மிகவும் இளம்வீரர்கள்.தோனி முன்பே வந்து ஆடவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அப்போதுதான் அவரால் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்த தொடரில் அவர் 5 அல்லது6வது வீரராக களமிறங்க வேண்டும் ‘ என சுனில் கவாஸ்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
  Published by:Ramprasath H
  First published: