நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் காலடி பதிக்க கடுமையாக போராடி வருகின்றன. அந்த வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 47-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் - ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு தொடரில் இரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன. முதல் சந்திப்பில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும், 10 விக்கெட்டுகளை சாய்த்தும் த்ரில் வெற்றியை ருசித்தது ராஜஸ்தான். கொல்கத்தா வீரர்களை பொருத்தவரை பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சொதப்புகின்றனர்.
தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் மூன்று வெற்றிகளை மட்டும் பதிவு செய்து சென்னைக்கு நிகராக புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோவதுடன் 2019 ம் ஆண்டு, தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து படைத்த மோசமான சாதனையை மீண்டும் ஒருமுறை நிகழ்த்த வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: தோனியை ஆதரித்த அளவுக்கு கிரேட் பிளேயர்களான சேவாக், கம்பீரை நிர்வாகம் ஆதரிக்கவில்லை -யுவராஜ் சிங்
ஓபனர் சரியாக செட் ஆகாதது, ஃபார்மில் இல்லாத வருண் சக்கரவர்த்திக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது என கொல்கத்தா அணியின் சொதப்பல் தொடர்ந்துகொண்டே சென்றதால் பிளே ஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது. வெங்கடேஷ் ஐயர் - ஃபின்ஞ் எழுச்சி பெற்றால் மட்டுமே ஆரம்பத்திலிருந்து அணியின் ஸ்கோர் உயரும். பந்துவீச்சில் உமேஷ் யாதவ்வை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி சோபிக்காதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியை பொருத்தவரை 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து பட்டியலில் மூன்றாமிடம் வகிக்கிறது.இனி வரக்கூடிய ஐந்தில் இரண்டு வெற்றியடைந்தாலே பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகும்.
ஓபனர் பட்லர் விளையாடிய ஒன்பது போட்டிகளில் இரண்டு சதம் உட்பட 566 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப்பை வசப்படுத்தியுள்ளார். 2016 விராட் சாதனையை முறியடித்த பட்லர் அவரின் 973 ரன்களை முந்துவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மிடில் ஆர்டரும் பலமாக இருப்பதால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு திண்டாட்டமே.
பந்துவீச்சில் சஹல், போல்ட், அஸ்வின், பிரஷித், குல்தீப் சன் என அசுரபலத்தில் இருக்கின்றனர். முதல் போட்டியில் ரஸலை டக் அவுட் செய்த அஸ்வின் மீண்டும் அதே மேஜிக் நிகழ்த்த வேண்டியது அவசியமாகிறது. வான்கடே மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: IPL 2022 CSK vs SRH ராகுல் திராவிடின் இந்த சாதனையையும் முறியடித்த தோனி
இரு அணிகளும் 25 முறை இதற்கு முன் மோதியதில் கொல்கத்தா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் 12 போட்டிகளில் வெற்றிகண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2022, KKR, Rajasthan Royals