விளையாட்டு

  • associate partner

வாழ்வா? சாவா? போராட்டம் - டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த டெல்லி அணி

ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

வாழ்வா? சாவா? போராட்டம் - டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த டெல்லி அணி
டெல்லி, ஹைதராபாத்
  • Share this:
ஐ.பி.எல் 2020-ம் ஆண்டு தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி லீக் சுற்றில் தொடக்க போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் கடைசி நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியைக் குவித்தன. லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்று ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ஹைதராபாத்.

ப்ளேஆப் சுற்றில் பெங்களூரு அணியைத் தோற்கடித்து குவாலிபையர் இரண்டாவது போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது ஹைதராபாத். மறுபுறம் டெல்லி அணி தொடர் தோல்விகளைத் தழுவி வருகிறது. லீக் தொடரின் தொடக்க போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி விளையாடிய 6 போட்டிகளில் ஆர்.சி.பி உடனான போட்டியில் மட்டுமே டெல்லி அணி வெற்றி பெற்றது.

எனவே, இன்றைய போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
First published: November 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading