• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • DC vs MI | மும்பையை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி

DC vs MI | மும்பையை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி

DC vs Mi

DC vs Mi

மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 46-வது லீக் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

    ரோஹித் சர்மா (7), டி-காக் (19), சூர்யாகுமார் யாதவ் (33), சவுரவப் திவாரி (15), பொல்லார்டு (6) ரன்களில் அவுட்டாகினர். மும்பை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் பெவிலயன் திரும்பியதால் அந்த அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்வரிசை வீரர்களும் டெல்லி அணியின் பந்துவீச்சில் ரன்சேர்க்க முடியாமல் திணறினார்கள்.

    இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி சார்பில் அவேஷ் கான் மற்றும் அக்ஷர் படேல் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

    130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ப்ரித்திவ் ஷா (6), ஷிகார் தவான் (8), ஸ்டீவன் ஸ்மித் (9) ரன்களில் அவுட்டாகினர்.

    கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரோயஸ் ஐயர் நிதானமாக விளையாடினர். ரிஷப் பந்த் 26 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த அக்ஷர் படேல் 9 ரன்னிலும், ஹெட்மயர் 15 ரன்னிலும் அவுட்டாகினர். டெல்லி 93 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடினார்.

    ஸ்ரோயாஸ் மற்றும் அஸ்வின் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். டெல்லி 19.1 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. ஸ்ரோயஸ் ஐயர் 33 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுனடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் சென்னைக்கு அடுத்த அணியாக டெல்லி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அடுத்த 2 அணிகள் எது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: