ஐ.பி.எல் 2021: மற்றுமொரு டெல்லி வீரருக்கு கொரோனா பாதிப்பு

அன்ரிச் நார்ட்ஜ்

டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

  சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, தமிழ், மலையாளம், தெலுகு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சுந்தர் சி, பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7,000-த்தை எட்டியுள்ளது.

  கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கடந்த ஆண்டைப் போல பொதுமுடக்கம் அறிவித்து செயல்பாடுகள் அனைத்தும் முடக்கப்படவில்லை. இந்த கொரோனா பாதிப்புக்கு இடையிலும் ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அனைத்து அணிகளும் முதல்சுற்று லீக் போட்டிகளை தீவிரமாக எதிர்கொண்டுவருகின்றன. ஐ.பி.எல் அணி நிர்வாகங்களும், வீரர்களும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றும்போது கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக தப்ப இயலவில்லை. ஏற்கெனவே ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு முன்பே டெல்லி வீரர் சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரைப்போல பெங்களூரு வீரர்கள் தேவ்தத் படிக்கல், டேனியல் சாம்ஸுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

  இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு மூன்று தினங்களுக்கும் பதிலாக தினமும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: