• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா... அஸ்வின் - மோர்கன் மோதல் குறித்து டெல்லி உரிமையாளர் கருத்து

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா... அஸ்வின் - மோர்கன் மோதல் குறித்து டெல்லி உரிமையாளர் கருத்து

KKR vs DC

KKR vs DC

ரவிசந்திரன் அஸ்வின் - இயான் மோர்கன் இடையிலான மோதல் குறித்து டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடப்பு ஐபிஎல் தொடரில் அஸ்வினுக்கும் மோர்கனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தான் தற்போது காரச்சார விவதமாக மாறி உள்ளது. அஸ்வினுக்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அஸ்வினுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். ட்விட்டரிலும் இந்த சம்பவம் தொடர்பாக வார்த்தை போர் அதிகரித்துள்ளது.

    கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது, அஸ்வினும், ரிஷப் பண்ட்டும் களத்தில் இருந்தனர். பந்த் அடித்த பந்தில் ஒரு ரன் எடுத்த போது திரிபாதி எடுத்து த்ரோ வீசியபோது, பந்து பண்ட் உடலில் பட்டு சென்றது. இதனால் அஸ்வின் அவரை இரண்டாவது ரன் ஓட கூப்பிட்டார். ரிஷப் பந்தும் 2-வது ரன்னுக்கு சென்றார்.

    அப்போது தான் இயான் மோர்கன் அஸ்வினுடன் மோதலில் ஈடுபட, இருவருக்கும் இடையே மோதல் தீவிரம் அடைந்ததது. பொதுவாக . பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது உடலில் பட்டுவிட்டால் பேட்ஸ்மேன் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது விதிமுறை இல்லாவிட்டாலும், இந்த மரபு கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

    Also Read : அஸ்வின் நடத்தையில் கோபமடைந்த தோனி கடுமையாக திட்டினார்- சேவாக் மனம் திறப்பு

    இந்த சம்பவம் தான் அஸ்வின் - மோர்கன் மோதலுக்கு காரணமாக அமைந்தது. அஸ்வின் செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பாரத் ஜிண்டால் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு அவர் 2019 உலகக் கோப்பை இறுதி போட்டியை உதராணமாக நினைவுப்படுத்தி உள்ளார்.

    டெல்லி கேபிடல்ஸ் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால்


    2019 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. பரபரப்பான அந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பந்து பவுண்டரிக்கு சென்று விடும். இதனால் நடுவர் 6 ரன்கள் கொடுப்பார். இந்த 6 ரன்கள் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

    Also Read : அஸ்வின் விவகாரத்தில் பெரிய குற்றவாளி தினேஷ் கார்த்திக்தான் - சேவாக் கடும் சாடல்

    இதனை நினைவுப்படுத்திய ஜிண்டால், பென் ஸ்டோக்ஸின் 4 கூடுதல் ரன்களுக்கு பந்து பவுண்டரிக்கு சென்றால் இங்கிலாந்து 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல எந்த பிரச்சனையும் இல்லை? ஆனால் அஸ்வின் கூடுதல் ரன் எடுக்கும்போது உலகம் பைத்தியம் பிடிக்குமா? உங்களுக்கு முற்றிலும் பின்னால் இருக்கிறோம் அஸ்வின்'' என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: