• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்த அவமானம் எனக்கு தேவையா... ட்ரோல் செய்யப்படும் ரிஷப் பந்த்

இந்த அவமானம் எனக்கு தேவையா... ட்ரோல் செய்யப்படும் ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்

ஐபிஎல் 2021 தொடரின் இறுதி போட்டிக்கு டெல்லி அணி முன்னேறாத நிலையில் ரிஷப் பந்தின் ட்விட்டர் பதிவை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் லீக் போட்டிகள் டெல்லி அணிக்கு வெற்றிகரமாகவே இருந்தது. டெல்லி அணி 14 போட்டிகளில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் ப்ளே ஆப் சுற்றில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்து இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்ததது. இதனால் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை பறிக்கொடுத்ததால் கேப்டன் ரிஷப் பந்த் மிகவும் ஏமாற்றமாக இருந்தார். ரிஷப் பந்த் தோல்வியிலிருந்து மீளாத நிலையில் சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இதற்கான காரணமும் சுவராஸ்யமானது.

    டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ட்விட்டரில் ராமநவமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் அவர் சமூக வலைதளத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறார். ஏனென்றால் கொண்டாடப்படுவது ராம நவமி அல்ல, மகா நவமி. இதனால் ரசிகர்கள் பலர் அவரது ட்விட்டை ட்ரோல் செய்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் ராமநவமி என்று பதிவிட்டு வாழத்து தெரிவித்து இருந்தார்.இதற்கு பாஜக தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது.



    ரிஷப் பந்த் பதிவை கேலி செய்துள்ள ரசிகர்கள் ராம நவமி ஏப்ரல் மாதம் வரும். தற்போது வந்துள்ள மகா நவமி ப்ரோ என்றுள்ளனர். மற்றொரு பயனாளர் ஐபிஎல் தோல்விக்கு பின் ரிஷப் பந்தின் மனம் குறைவாக வேலை செய்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

    Also Read : மிக மோசமான ஐபிஎல் தொடர் இது தான் - முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி



    ரிஷப் பந்த் தேவையில்லாமல் வாயை கொடுத்து ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனத்தை பெற்றுள்ளார். எந்த அவமானம் எனக்கு தேவை தானா என்ற அவரது மைன்ட் வாய்ஸை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ராம நவமி பண்டிகை ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதே சமயம் மகா நவமி நவராத்திரியின் போது கொண்டாடப்படுகிறது. துர்க்கையை வழிபடும் நாள் எது. இதற்குப் பிறகுதான் தசரா, அதாவது விஜயதசமி வருகிறது.



    ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு பந்த் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை வெளியிட்டார். அதில், "இந்த சீசனின் முடிவு ஏமாற்றமளித்தது. ஆனால் இந்த அசாதாரண வீரர்களின் அணியை வழிநடத்துவதை விட வேறு எதுவும் எனக்கு பெருமையான தருணமாக இருந்திருக்க முடியாது. சீசன் முழுவதும் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம். உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் மிக முக்கியமாக எங்கள் ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அடுத்த ஆண்டு நாங்கள் வலுவான மீள்வருவோம்“ என்று தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: