ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி. பேட்ஸ்மேன்களின் சொர்க்க பூமியான சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 23 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி - ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டெல்லி அணியில் பிர்த்வி ஷா மற்றும் தவண் ஆகியோர் களமிறங்கினர். ஆர்ச்சர் பந்துவீச்சில் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். தவண் 5 ரன்களிலும், பிரித்வி ஷா 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். 30 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ் 39 ரன்களில் வெளியேறினார். அதிரடி நாயகன் ஹெட்மயர் 5 சிக்ஸர்கள் விளாசி 45 ரன்கள் சேர்க்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
185 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கி நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். பட்லர் 13 ரன்னில் வெளியேற தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 24 ரன்கள் சேர்த்து நோர்க்கியா பந்துவீச்சில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கு முன் சார்ஜா மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
டெல்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ராஜஸ்தான் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடிய திவாட்டியா அதிகபட்சமாக 38 ரன்கள் சேர்த்து அணியின் ரன் எண்ணிக்கைய சற்று உயர்த்தினார். இருப்பினும் 2 பந்துகள் மீதமிருக்கும் போதே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ORANGE CAP:
RESULT DATA:
வேகப்பந்துவீச்சாளர் ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நான்கு ஓவர்கள் வீசிய தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார்.
ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2020