முகப்பு /செய்தி /விளையாட்டு / DC vs SRH | ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

DC vs SRH | ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

ஐபிஎல் 2021

ஐபிஎல் 2021

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டள்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐபிஎல் 2021 தொடரின் 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டள்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், விருதமான் சஹா களமிறங்கினார்கள். அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து வந்த வீரர்களும் ரன் சேர்க்க முடியாமல் திணறினார்கள்.

டெல்லி அணி சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணிகளை வீழ்த்தி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார். சன்ரைசர்ஸ் அணி 20 முடிவுகளில் 9 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடா அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழத்தினார்.

இதை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி இலக்கை எளிதாக துரத்தியது. எளிய இலக்கு என்பதால் நிதானமாக விளையாடி டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்ரோயஸ் ஐயர் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: IPL 2021, News On Instagram