IPL 2021 : தங்கத்த தகர டப்பான்னு நெனச்சுட்டாங்க - தீபக் ஹூடா பாடம் எடுத்தது யாருக்கு?

IPL 2021 :  தங்கத்த தகர டப்பான்னு நெனச்சுட்டாங்க - தீபக் ஹூடா பாடம் எடுத்தது யாருக்கு?

தீபக் ஹூடா

“நீங்கள் பின்வாங்காமல் இருப்பது எப்படி என கற்றுக்கொள்ள விரும்பினால், தீபக் ஹூடாவின் கதையை படித்து, இரவு பேட் செய்ததை பாருங்கள்” என இர்பான் பதான் கூறியுள்ளார்.

  • Share this:
    தீபக் ஹூடா.. வந்திருக்கிறது சூறாவளி-ன்னு தெரியாம சுத்திநின்னவங்களுக்கு பேட்டால பாடம் எடுத்துட்டு போனார். ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரரான தீபக் ஹூடா 28 பந்துகளில் 64 ரன்கள் விளாசி அதிரடியை காட்டினார். நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தேர்வாகாத டொமெஸ்டிக் கிரிக்கெட்டர் அடித்த அதிகவேக அரைசதமாக இது பதிவானது. தீபக் ஹூடா களத்துக்கு வரும்போதே பந்தை விளாச வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது. 13-வது ஓவரில் சிவம் துபேவின் பந்துவீச்சில் முதல் சிக்ஸரை பறக்கவிட்டு அதிரடி காட்டினார். அதே ஓவரில்கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த ஓவரை வீசிய ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் கோபால், கிறிஸ் மோரிஸ், சக்காரியா என ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார்.

    சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் சந்தித்த அவமானங்களுக்கு இந்த அரைசதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் ஹூடா. பரோடா அணிக்காக கடந்த 11 வருடங்களாக விளையாடிவருகிறார். அந்த அணியின் துணை கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. பரோடா அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியா இருக்கிறார். சையத் முஸ்தாக் அலி தொடரின் போது க்ருணால் பாண்டியா, ஹூடாவை தரக்குறைவாக வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டார் ஹூடா. கடிதம் வெளியிட்டது தவறு என பரோடோ அணி நிர்வாகம் இவரை சஸ்பெண்ட் செய்தது.

    “நீங்கள் பின்வாங்காமல் இருப்பது எப்படி என கற்றுக்கொள்ள விரும்பினால், தீபக் ஹூடாவின் கடந்த சில மாதங்களின் கதையை படித்து, இரவு பேட் செய்ததை பாருங்கள்.. நன்றாக விளையாடினீர்கள் நண்பா..” என இர்பான் பதான் ட்வீட் செய்துள்ளார்.

    ஹூடா வெளியிட்ட கடிதத்தில், ‘ பரோடா அணிக்காக கடந்த 11 வருடங்களாக விளையாடி வருகிறேன். இந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பரோடா அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளேன். நான் இப்போது மனஅழுத்தத்தாலும், மன உளைச்சலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா சக வீரர்கள் முன்பும், மற்ற அணி வீரர்கள் முன்பும் தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது உள்ளூர் கிரிக்கெட் தொடரில் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து விசாரித்த பரோடா கிரிக்கெட் நிர்வாகம் என்னத்தான் இருந்தாலும் ஹூடா கடிதம் வெளியிட்டது தவறு. அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிப்பதாக அறிவித்தது. தங்கத்தை தகர டப்பான்னு நெனச்சுட்டாங்க..

    இந்த அறிவிப்பு வெளியானபோது ஹூடாவுக்கு ஆதரவாக இர்பான் பதான் கருத்துகளை தெரிவித்திருந்தார். இர்பான் பதான் பரோடா அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடியுள்ளார். “இடைநீக்கம் போன்ற சம்பவம் ஒரு வீரருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதை தவிர்க்க வேண்டும். கொரோனா போன்ற கடினமான காலங்களில் ஒரு வீரரின் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகும். அவர் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
    Published by:Ramprasath H
    First published: