• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிஎஸ்கே தோற்றாலும் சாஹர் ஹேப்பிதான்: மைதானத்தில் ப்ரோபோஸ் செய்து காதலியின் மனதை வென்ற தீபக்

சிஎஸ்கே தோற்றாலும் சாஹர் ஹேப்பிதான்: மைதானத்தில் ப்ரோபோஸ் செய்து காதலியின் மனதை வென்ற தீபக்

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து காதலிக்கு ரோஜாப் பூ கொடுத்து காதலை வெளிப்படுத்தினார் தீபக் சாஹர்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 53-வது லீக் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டூ-பிளெசிஸ் மற்றும் ருதுராஜ் களமிறங்கினார்கள். ருதுராஜ் 12 ரன்னில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அடுத்த வந்த சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் ஓற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும் ராபின் உத்தப்பா 2 ரன் மற்றும் அம்பாதி ராயுடு 4 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கேப்டன் மகேந்திர சிங் தோனி 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 12 ரன்களே மட்டுமே எடுத்து அவரும் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி 61 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் தொடக்க வீரர் டூ-பிளெசிஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் கே.எல்.ராகுல் சிக்ஸரும், பவுண்டரிகளாக விளாசி அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் 12 ரன்னிலும், சர்ப்பராஜ் கான் ரன் ஏதுக்காமல் அவுட்டாகினர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Deepak Chahar (@deepak_chahar9)





    மறுபுறம் சூறாவளி ஆட்டம் ஆடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தநிலையில், போட்டியில் தோல்வியடைந்ததால் சென்னை ரசிகர்கள் சோகமாக இருந்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Chennai Super Kings (@chennaiipl)





    ஆனால், சென்னை அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் பெவிலியனில் இருந்த தனது காதலிக்கு அனைவர் முன்பும் முட்டிப் போட்டு ரோஜாப் பூவைக் கொடுத்து காதலை வெளிப்படுத்தினார். அந்தப் பெண்ணும் ரோஜாப் பூவை வாங்கி தீபக் சாஹரின் காதலை ஏற்றுக்கொண்டார். இந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சாஹர், ‘புகைப்படம் எல்லாவற்றையும் சொல்லிவிடும். உங்கள் அனைவரும் வாழ்த்தும் தேவை’ என்று பதிவிட்டுள்ளார். தீபக் சாஹர் காதலை வெளிப்படுத்தும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: