நீங்க நல்ல பவுலர்தான்.. ப்ளீஸ் பந்துவீசாதீங்க - முதல் போட்டிக்கு பின்னர் தீபக் சஹருக்கு ரசிகர் வேண்டுகோள்

நீங்க நல்ல பவுலர்தான்.. ப்ளீஸ் பந்துவீசாதீங்க - முதல் போட்டிக்கு பின்னர்  தீபக் சஹருக்கு ரசிகர் வேண்டுகோள்

தீபக் சஹர்

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான  போட்டிக்கு பின்னர் ரசிகர் ஒருவரிடம் இருந்து வந்த மெசெஜ் குறித்து தீபக் சாஹர் மனம் திறந்துள்ளார்

  • Share this:
    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் அட்டகாசமான பர்ஃபாமென்ஸ் கொடுத்தார். முதல் போட்டியில் தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய போட்டியில் ஆடினார்.  முதல் ஓவரில் இருந்தே விக்கெட் வேட்டையை தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகளை அள்ளினார். நேற்றைய  போட்டியில் 4 ஓவரை வீசிய தீபக் சாஹர் 1 மெய்டனுடன் 13 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை தூக்கினார்.

    முதல் ஓவரின் 4வது பந்திலே மயங்க் அகர்வாலை க்ளீன் போல்ட் செய்த விக்கெட் வேட்டையை தொடங்கினார். தீபக் சஹரின் மூன்றாவது ஓவரின் 2-வது பந்தில் கிறிஸ் கெய்ல் சிக்கினார்.  தீபக் வீசிய ஸ்லோ பந்தை ட்ரைவ் செய்ய முற்பட்டு ஜடேஜா வசம் சிக்கினார் கெய்ல். 10 ரன்களில் வெளியேறினார் கெய்ல். இதனையடுத்து நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். தீபக் சாஹர் ஷாட்டாக வீசிய பந்தை தூக்கியடிக்க முயன்று தாக்கூரிடம் கேட்ச் கொடுத்தார்.  2 பந்துகளை சந்தித்த பூரன் ரன் எதுவும் இல்லாமல் வெளியேறினார். தீபக் தனது 4-வது ஓவரை வீசினார். 2-வது பந்தை மிட் ஆஃப் திசையில் தீபக் ஹூடா அடிக்க முற்பட்டு டுப்ளிசிஸ் வசம் சிக்கினார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான  போட்டிக்கு பின்னர் ரசிகர் ஒருவரிடம் இருந்து வந்த மெசெஜ் குறித்து தீபக் சாஹர் மனம் திறந்துள்ளார். முதல் போட்டியில் தீபக் சாஹர் 36 ரன்களை வாரி வழங்கியதோடு விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. மேலும் தனது பிரதானமான ஸ்விங்கை பயன்படுத்தாமல் ஸ்லோ பால், கட்டர் என போட்டதால் மும்பை வான்கடே மைதானத்தில் அடிவாங்கினார் தீபக் சஹர்.

    முதல் போட்டி முடிந்ததும் நடந்த சம்பவம் குறித்து பேசிய தீபக் சாஹர், ‘நான் அறைக்கு சென்றதும் சோஷியல் மீடியாக்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பையனிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. நீங்கள் நல்ல பந்துவீச்சாளர்தான் ஆனால் அடுத்தப் போட்டியில் நீங்கள் விளையாட வேண்டாம். எதிர்ப்பார்ப்புகள் நிறைய இருக்கிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியம். ஒரே ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரை நீங்கள் மதிப்பிடாதீர்கள். அனைவரையும் ஆதரியுங்கள். அந்த நபர் சொன்னது போல் நான் இந்தப்போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால். இப்படி சிறப்பாக செயல்பட்டிருக்க முடியுமா. வான்கடே மைதானம் எனக்கு சாதகமானதாக இருந்தது என்று தான் கூறவேண்டும்” எனப் பேசியுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published: