• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • DCvsCSK | டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி

DCvsCSK | டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தோனி

தோனி ரிஷப் பண்ட்

தோனி ரிஷப் பண்ட்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 8ம் தேதி முடிவடைந்தன. இதில் டெல்லி , சென்னை, பெங்களூரு கொல்கத்தா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது Qualifier ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    வரும் 11ம் தேதி சார்ஜாவில் நடக்கும் Eliminator போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி, முதலாவது Qualifier ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். வரும் 15ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. சென்னை, டெல்லி அணிகளின் பலத்தை ஒப்பிடும், சென்னை அணி தொடர் தோல்விகளுடன்தான் qualifier போட்டியை எதிர்கொள்கின்றன. அதேநேரத்தில் டெல்லி அணி வலுவாக உள்ளது. இறுதியாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியுடன் தோல்வியைத் தழுவினாலும் பேட்டிங் மிகச் சிறப்பாகவே இருந்தது.

    சென்னையைப் பொறுத்தவரையிர் ரூத்ராஜ் கெய்க்வாட்டும், டூப்ளிஸிஸும் சோபிக்காமல் போனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கத் திணறுவது சென்னை அணியின் பலவீனமாக உள்ளது. இருப்பினும், qualifier போன்ற நாக்அவுட் போட்டிகளில் சென்னை அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்பது வழக்கமான ஒன்றுதான்.


    எனவே, இந்த போட்டி ஆடியன்ஸ் மிகுந்த விறுவிறுப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: