• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கிங் இஸ் பேக்- தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி

கிங் இஸ் பேக்- தோனியின் ஆட்டம் குறித்து புகழ்ந்த விராட் கோலி

தோனி கோலி

தோனி கோலி

டெல்லி அணிக்கு எதிரான தோனியின் ஆட்டம் குறித்து விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி அணி, சென்னை அணி குவாலியர் சுற்றில் இன்று மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், டூப்ளிஸிஸ் களமிறங்கினர்.

    டூப்ளிஸிஸ் 1 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பா களமிறங்கினார். உத்தப்பா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ரூத்ராஜ், உத்தப்பா இணை டெல்லி அணியின் பந்துவீச்சுகளைச் சிதறடித்தனர்.

    ரூத்ராஜ் நிதானமாக ஆட உத்தப்பா அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய உத்தப்பா 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தநிலையில் டாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரதல் தாகுர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய 1 ரன் எடுத்திருந்த நிலையில் அம்பத்தி ராயுடு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய மொயின் அலி சிறுது நேரம் நீடித்து விளையாடினார்.

    மறுபுறம் அதிரடியாக ஆடிய ரூத்ராஜ் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, கேப்டன் தோனி களமிறங்கினார். 19 வது ஓவரில் இறங்கிய தோனி முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இறுதி ஓவரின் முதல் பந்திலேயே மொயின் அலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நான் ஸ்டிரைக்கில் இறங்கினார். தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரில் இரண்டாவது பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார் தோனி.

    அடுத்த பந்தை டாம் கரன் வைட் பந்தாக வீசினார். நான்கு பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் தோனி. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. டெல்லி அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடம் மோதவுள்ளது. இந்த வெற்றியும் மூலம் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது சென்னை அணி.

    கடந்த சில ஆண்டுகளாக ஃபார்ம் இல்லாமல் தவித்த தோனி, இந்தத் தொடரிலும் ரன் அடிக்க முடியாமல் திணறினார். இந்தப் போட்டியின் இறுதியில் அவர் களமிறங்கும்போது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையின்மை இருந்தது. ஆனால், அதை மீறி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்று தான் எப்போது சிறந்த ப்னிஷர் என்று நிரூபித்தார். தோனியின் வின்னிங் ஷார்ட்டை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.


    தோனியின் ஆட்டம் குறித்த கோலியின் ட்விட்டர் பதிவில், ‘கிங் இஸ் பேக். கிரிக்கெட்டில் எல்லா நேரத்துக்குமான தலைசிறந்த பினிஷர். இந்த இரவில் மீண்டும் ஒருமுறை என்னை இருக்கையில் இருந்து துள்ளிக்குதிக்க வைத்துள்ளார்’ என்று பாராட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: