• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அதிரடி - 172 ரன்களைக் குவித்த டெல்லி அணி

ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அதிரடி - 172 ரன்களைக் குவித்த டெல்லி அணி

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களைக் குவித்துள்ளது.

  • Share this:
    ஐ.பி.எல் 2021 லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி அணி, சென்னை அணி குவாலியர் சுற்றில் இன்று மோதுகின்றன. அதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். ப்ரித்வி ஷா, அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில் ஷிகர் தவன் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஷ் ஐய்யரும் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஹஸில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் மறுபுறம் ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடிவந்தார். ஸ்ரேயாஷ் ஐய்யர் விக்கெட்டைத் தொடர்ந்து அக்ஷர் பட்டேல் களமிறங்கினார். அவர், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து கேப்டன் ரிஷப் பன்ட் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ப்ரித்வி ஷா 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹெட்மயர் அதிரடியாக ஆடி 37 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பண்ட் 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

    ஆட்டநேர இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணி 172 ரன்களைக் குவித்தது. சென்னை அணி சார்பில் ஹஸில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, மொயின் அலி, டுவைன் ப்ராவோ தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: