• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்பு 51 ரன்கள் எடுத்த டெல்லி அணி- அதிரடி காட்டும் ப்ரித்வி ஷா

பவர்ப்ளே முடிவில் 2 விக்கெட் இழப்பு 51 ரன்கள் எடுத்த டெல்லி அணி- அதிரடி காட்டும் ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

சென்னைக்கு எதிரானப் போட்டியில் பவர்ப்ளேவில் டெல்லி அணி 51 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 8ம் தேதி முடிவடைந்தன. இதில் டெல்லி , சென்னை, பெங்களூரு கொல்கத்தா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது Qualifier ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். வரும் 11ம் தேதி சார்ஜாவில் நடக்கும் Eliminator போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    அதில் வெற்றி பெறும் அணி, முதலாவது Qualifier ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். வரும் 15ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவண் களமிறங்கினர். அதிரடியைக் காட்டிய ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 45 ரன்களைக் குவித்துள்ளார்.

    ஆனால், தவன் 7 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 1 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்துள்ளனர். யாரும் எதிர்பாராத வகையில் அக்ஷர் பட்டேல் களமிறங்கியுள்ளனர். பவர்ப்ளே முடிவில் டெல்லி அணி 51 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. சென்னை அணி சார்பில் ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: