• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பலமான டெல்லியை வீழ்த்துமா சென்னை- இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்கள் யார் யார்?

பலமான டெல்லியை வீழ்த்துமா சென்னை- இரு அணிகளின் ப்ளேயிங் 11 வீரர்கள் யார் யார்?

தோனி, ரிஷப் பண்ட்

தோனி, ரிஷப் பண்ட்

இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் Qualifier ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 8ம் தேதி முடிவடைந்தன. இதில் டெல்லி , சென்னை, பெங்களூரு கொல்கத்தா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள முதலாவது Qualifier ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். வரும் 11ம் தேதி சார்ஜாவில் நடக்கும் Eliminator போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி, முதலாவது Qualifier ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். வரும் 15ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    சென்னை, டெல்லி அணிகளின் பலத்தை ஒப்பிடும், சென்னை அணி தொடர் தோல்விகளுடன்தான் qualifier போட்டியை எதிர்கொள்கின்றன. அதேநேரத்தில் டெல்லி அணி வலுவாக உள்ளது. இறுதியாக நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியுடன் தோல்வியைத் தழுவினாலும் பேட்டிங் மிகச் சிறப்பாகவே இருந்தது. சென்னையைப் பொறுத்தவரையிர் ரூத்ராஜ் கெய்க்வாட்டும், டூப்ளிஸிஸும் சோபிக்காமல் போனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கத் திணறுவது சென்னை அணியின் பலவீனமாக உள்ளது. டெல்லிக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியையே தழுவியுள்ளது. இதுபோன்ற எதிர்மறையான காரணிகள் இருந்தாலும், தோனியின் கேப்டன்சி, ரூத்ராஜ், டூப்ளிஸிஸ் ஓப்பனிங், ஜடேஜாவின் சிறப்பான பங்களிப்பு, தீபக் சாஹர் பந்துவீச்சு போன்றவை அணிக்கு பலமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை அணியின் உத்தேச வீரர்கள்:

    தோனி, பஃப் டூப்ளிஸிஸ், ரூத்ராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, ஷ்ரதல் தாகுர், டுவைன் ப்ராவோ, ஜோஷ் ஹஸில்வுட், தீபக் சாஹர்,

    டெல்லி அணியின் உத்தேச வீரர்கள்:

    ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷிகர் தவன், ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மெயர், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், ககிசா ரபாடா, அவினேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: