• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • DC vs KKR IPL 202: டெல்லி ஓபனிங்கில் திடீர் மாற்றம், தமிழ்நாடு அணிக்கு ஆடும் கேரளா வீரருக்கு வாய்ப்பு

DC vs KKR IPL 202: டெல்லி ஓபனிங்கில் திடீர் மாற்றம், தமிழ்நாடு அணிக்கு ஆடும் கேரளா வீரருக்கு வாய்ப்பு

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

ஐபிஎல் 2021 தொடரின் 41வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் 41வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

    டெல்லி அணியில் பிரிதிவி ஷா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் இறங்கி ஆடிவருகிறார் ஷிகர் தவான் 20 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து பெர்கூசன் பந்தில் கவர் பாயிண்ட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சற்று முன் ஷ்ரேயஸ் அய்யர் 1 ரன்னில் சுனில் நரைன் பந்து ஒன்று திரும்ப பவுல்டு ஆகி வெளியேறினார்.

    ரிஷப் பந்த் இறங்கியுள்ளார், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த் சேர்க்கை டெல்லிக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆந்த்ரே ரஸல் காயமடைந்ததால் டிம் சவுதி அறிமுகப் போட்டியில் கொல்கத்தாவுக்காக களமிறங்கியுள்ளார், புல்டாஸ் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதில் சந்தீப் வாரியர் தெர்வு செய்யப்பட்டுள்ளார்.

    சந்தீப் வாரியர் கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் இப்போது தமிழக அணிக்கு ஆடிவருகிறார். பிரிதிவி ஷா இல்லாதது கொல்கத்தாவுக்கு பெரிய ரிலீஃப். பிட்ச் மந்தமானது, பேட்டிங் அவ்வளவு சுலபமல்ல. 150-160 நல்ல இலக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணி விவரம்:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், டிம் சவுத்தி, லாக்கி பெர்கூசன், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர்

    டெல்லி கேப்பிடல்ஸ்: தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், ஷிம்ரன் ஹெட்மையர், லலித் யாதவ், அக்சர் படேல், அஸ்வின், கேகிசோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்யே, ஆவேஷ் கான்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: