David Warner | உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க அப்பா: டேவிட் வார்னர் மகள் வேண்டுகோள்

David Warner | உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க அப்பா: டேவிட் வார்னர் மகள் வேண்டுகோள்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கையை மீறிக்கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    அதோடு ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அணியிலேயே இல்லை, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அவர் பந்து பொறுக்கிப் போட்ட காட்சியும் டிரிங்க்ஸ் சுமந்த காட்சியும் நெட்டிசன்களிடையே கடும் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் டேவிட் வார்னர், அவருக்கே இந்த கதியா என்றும், நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்ட சன்ரைசர்ஸ் நிர்வாகம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

    தற்போது ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, இந்தியாவிலிருந்து யாராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது, மீறினால் சிறைத்தண்டனை கடும் அபராதம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தடை உத்தரவு போட்டார்.

    இதனை எதிர்த்து முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் பிரதமரை நோக்கி ‘உங்கள் கைகளில் ரத்தம்’ என்று பதிவிட்டு மாலத்தீவு சென்றார், பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியப் பிரதமர், ‘குற்றச்சாட்டு அபத்தம், எல்லாம் நன்மைக்கே’ என்றார்.

    தடையை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மே 15ம் தேதிக்குப் பிறகே செல்ல முடியும். இந்நிலையில் வார்னர் மகள் இவி வரைந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் ‘அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விடுங்கள், நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
    Published by:Muthukumar
    First published: