• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இன்ஸ்டாவில் வார்னரை கலாய்த்த ஹிட்மேன் - இணையத்தில் வைரலாகும் பதிவு

இன்ஸ்டாவில் வார்னரை கலாய்த்த ஹிட்மேன் - இணையத்தில் வைரலாகும் பதிவு

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

குவாரண்டைன் நாள்களை எப்படி செலவிடுவது. எனக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது என இன்ஸடாகிராமில் வார்னர் தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டேவிட் வார்னர் சென்னை வந்தடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் 7 நாள் குவாரண்டைனில் வைக்கப்படுகின்றனர். அதன்படி டேவிட் வார்னரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குவாரண்டைன் நாள்களில் எப்படி பொழுதை கழிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு வார்னர் இன்ஸ்டாகிராமில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், ‘ நான் நேற்று மதியமே சென்னை வந்துவிட்டேன். ஒரு நல்ல தூக்கத்துக்கு பிறகு இப்போது கண்விழித்துள்ளேன். அடுத்த 6 -7 நாள்கள் குவாரண்டைனில் இருக்கனும். இந்த நாள்களை எப்படி செலவிடுவது. எனக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்த நாள்களை கடத்த கமெண்டில் எதாவது ஒரு ஐடியாவை கொடுங்கள். ஒரு ஜாலியான, குறும்புத்தனமான டாஸ்குகளை கொடுங்கள். தயவு செய்து எதையாவது ஒன்றை சொல்லுங்கள் ’ எனப் பேசியிருந்தார்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by David Warner (@davidwarner31)






    இந்த வீடியோவுக்கு ரோஹித் ஷர்மா போட்ட கமெண்ட் தான் ஹைலைட். வார்னர் டிக்டாக் ரொம்ப மிஸ் செய்வார் என ரோஹித் பதிவிட்டிருந்தார். புட்டபொம்மா பாட்ட கேட்டாலே இப்ப எல்லாம் வார்னர் நியாபகம்தான் வருது. அந்த அளவுக்கு டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கிக் கொண்டிருந்தார் வார்னர். அதுமட்டுமல்லாது இப்போது ஃபேஸ் ஆப்பில் வேறு கலக்கி வருகிறார்.

    ரோஹித் கமெண்டுக்கு ரிப்ளே அளித்துள்ள வார்னர். ‘ நீங்க சொல்றதும் சரிதான். உங்களுடன் டூயட் பாடலாம் என நினைக்கிறேன்’ என பதிலுக்கு கமெண்ட் பாஸ் செய்துள்ளார் வார்னர். இனி இந்த வாரம் முழுவதும் வார்னர் கிட்ட இருந்து நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: