Home /News /sports /

டேவிட் வார்னர் பார்ட்டி பார்ட்டி என்று அலைவார், பிராக்டீசுக்கு வர மாட்டார், தகராறு செய்வார்- சேவாக் அதிர்ச்சி தகவல்

டேவிட் வார்னர் பார்ட்டி பார்ட்டி என்று அலைவார், பிராக்டீசுக்கு வர மாட்டார், தகராறு செய்வார்- சேவாக் அதிர்ச்சி தகவல்

வார்னர் - சேவாக்

வார்னர் - சேவாக்

டேவிட் வார்னரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எந்த வித மரியாதையும் மதிப்புமின்றி நடத்தியது, அவரை ஒதுக்கிப் புறக்கணித்தது என்றெல்லாம் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின, யாருக்கும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்பது பற்றி தகவல் இல்லை, ஆனால் டெல்லி டேர் டெவில்ஸுக்கு வார்னர் ஆடிய போது அவரது கேப்டன் விரேந்திர சேவாக், அவர் வார்னரைப் பற்றி வெளியிட்டிருக்கும் தகவல் உண்மையில் அதிர்ச்சிகரமானது.

மேலும் படிக்கவும் ...

    டேவிட் வார்னர் பிராக்டீஸ் செய்வதை விட பார்ட்டி பார்ட்டி என்று அலைவதில்தான் நாட்டமுடையவர். அணியின் மற்ற வீரர்களுடன் தகராறில் ஈடுபடுபவர் என்று சேவாக் குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டுள்ளார். ஹைதராபாத், டெல்லி போட்டிக்கு முன்பாக சேவாக் இதனைக் கூறினார்.

    கிரிக்பஸ் இணையதளத்தில் சேவாக் கூறியதாவது:

    நானும் இரண்டு வீரர்களுக்கு எதிராக எனது அதிருப்தியையும் வெறுப்பையும் காட்டியுள்ளேன் டேவிட் வார்னர் அதில் ஒருவர். அவர் முதன் முதலில் எங்களுடன் அணியில் சேர்ந்த போது பயிற்சி எடுப்பதிலோ, போட்டிகளிலோ அவரது நாட்டம் இருக்காது, எங்கு பார்ட்டிக்குச் செல்லலாம், என்று பார்ட்டி பற்றியே அவரது நாட்டம் அதிகமிருக்கும்.

    முதல் ஆண்டில் சில வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டார், இதனால் கடைசி 2 போட்டிகளுக்கு அவரை அனுப்பி விட்டோம். என்று குட்டை உடைத்தார் சேவாக்.

    டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் 2009-ம் ஆண்டு ஆடினார் டேவிட் வார்னர். 5 சீசன்கள் அங்கு ஆடினார், பிறகு 2014-ல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு வந்தார். 2016-ல் சாம்பியன்ஷிப்புக்கு ஹைதராபாத்தை இட்டுச் சென்றார்.

    இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ரூ.6.25 கோடிக்கு வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அன்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 58 பந்துகளில் 92 ரன்கல் விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றதோடு சன் ரைசர்ஸை பழி வாங்கும் விதமாகவும் அவரது பாடி லாங்குவேஜ் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: David Warner, IPL 2022, Virender sehwag

    அடுத்த செய்தி