விளையாட்டு

  • associate partner

'உலகத்தரம் வாய்ந்த கேப்டன்களால்தான் அப்படி செய்யமுடியும்' - தோனி, ஸ்டீபன் ஃப்ளெமிங்கை பாராட்டிய ஷேன் வாட்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், 2019 ஐபிஎல் சீசனில் அவருக்கு ஆதரவளித்ததற்காக எம்.எஸ்.தோனி மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங்கைப் பாராட்டியுள்ளார்.

'உலகத்தரம் வாய்ந்த கேப்டன்களால்தான் அப்படி செய்யமுடியும்' - தோனி, ஸ்டீபன் ஃப்ளெமிங்கை பாராட்டிய ஷேன் வாட்சன்
வாட்சன்
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 2:10 PM IST
  • Share this:
ஷேன் வாட்சன் 2018ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடிய போது முழங்கால் காயத்தையும் பொருட்படுத்தாமல் சென்னை அணியின் வெற்றிக்காக வாட்சன் போராடியது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2018ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 117 ரன்கள் எடுத்ததே அவரின் அதிகபட்ச ஸ்கோராகும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த வாட்சன் 11 வது போட்டி வரை அரைசதம்கூட எடுக்கவில்லை. பின்னர் அவர் இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

அந்த போட்டியின் இறுதி ஓவரில் சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் 2019 ஐபிஎல் சீசனில் அவரை மற்ற அணிகள் தேர்வு செய்ய சற்று யோசித்தனர்.


ஆனால் சிஎஸ்கே மீண்டும் வாட்சனை தேர்வு செய்தது. இதுகுறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் கூறிய வாட்சன்,  சதமடித்த இறுதிப் போட்டியான 2018 ஐபிஎல் சீசன் எனக்கு சிறப்பாக அமைந்தது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே என்னை தக்கவைத்தது. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அந்த இன்னிங்ஸிக்கு முன்னால் கூட என்னை சிஎஸ்கே காத்தது. மற்ற அணிகளாக இருந்தால் ரன்கள் இல்லாததற்கு நிச்சயம் விலக்கியிருப்பார்கள். ஆனால் சிஎஸ்கே  என் மீது நம்பிக்கை வைத்தது. “உலகத்தரம் வாய்ந்த கேப்டன்கள்” தான் இத்தகைய நம்பிக்கையை ஒரு வீரர் மீது வைப்பார்கள் என்று கேப்டன் டோனியை புகழ்ந்துள்ளார்.

மேலும் சிஎஸ்கே அணியை சிறப்பாக கொண்டு செல்வதாக அவர் தோனி மற்றும் ஃப்ளெமிங்கின் அணுகுமுறையை பாராட்டியுள்ளார். உங்களை யாரையாவது நம்பினால் அதை காட்ட நேர்மையாக இருக்க வேண்டும். மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் நான் ரன் அவுட் ஆனேன், ஆனால் அதுவரை, நான் நெருங்கி வந்தேன். என்னால் முடிந்த பங்கினை நான் சிஎஸ்கேவிற்கு தொடர்ந்து வழங்குவேன் என்று வாட்சன் மேலும் கூறினார்.மேலும் சி.எஸ்.கே அணிக்காக விளையாடியதற்காக நான் ஒரு அதிர்ஷ்டசாலி என்பதைப்போல உணர்கிறேன் என்றும் வாட்சன் நெகிழ்ந்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளின் வீரர்களும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தை அடைந்துள்ளனர். வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ள முதல் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading